நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், தி பேரடைஸ். இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன் குறித்த விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
பான் இந்திய அளவில் அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான், தி பேரடைஸ். இந்த படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
The Paradise Movie
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோகர், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம்தான், தி பேரடைஸ். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
2/5
'The Paradise' is a highly anticipated film
இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களுள் ஒன்றாக இருந்தது, தி பேரடைஸ். காரணம் இந்த படத்தில் நானி வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருப்பதோடு, இது பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்த படமாக இருந்தது. அது மட்டுமல்ல, இதற்கு முன்னர் ஸ்ரீகாந்த் ஒடெல்லா-நானி நடிப்பில் உருவான தசரா படம் நல்ல வரவேற்பை பெற்றதால், இந்த கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது.
3/5
Two popular songs from the movie The Paradise
தி பேரடைஸ் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஆயா ஷேர், யேஷ நகுல உள்ளிட்ட பாடல்கள் மக்களை கவர்ந்தன. இதையொட்டி, படமும் நன்றாக இருக்கும் என தியேட்டருக்கு போனவர்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சமானது. நல்ல ஒன்லைனை கொண்டு படத்தை உருவாக்க நினைத்தவர்கள், பின்பு, அதனை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் படத்தை எடுத்து வைத்திருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
4/5
Negative reviews of The Paradise
இத்தனை நெகடிவ் ரிவ்யூஸ்களுக்கு மத்தியிலும், இந்த பேரடைஸ் திரைப்படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.88 கோடி வரை உலகளவில் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், படக்குழு ஹேப்பியாக இருக்கிறதாம்.
5/5
Will the box office collections of 'The Paradise' rise
இனி வரப்போவது வீக்-எண்ட் என்பதால், இந்த படத்தின் வசூல் கண்டிப்பாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.