Nayanthara : நடிகை நயன்தாராவின் நீண்டகால தோழியான கீதுமோகன்தாஸ் எடுத்த டாக்ஸிக் படம் வசூல் ரீதியாக தோல்விப் படமாகியுள்ளது. முழு விவரம்
Nayanthara : டாக்ஸிக் படத்தின் வசூல், நயன்தாரா தோழி கீது மோகன்தாஸ் நட்பு உள்ளிட்ட முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/6
தோழியின் இயக்குநர் அவதாரம்:
தோழியின் இயக்குநர் அவதாரம்: நடிகை நயன்தாராவின் 20 ஆண்டுகால நெருங்கிய தோழியான கீது மோகன்தாஸ், தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் இயக்குனராக களம் இறங்கிய மிகப்பெரிய பான்-இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
2/6
பிரமாண்ட பட்ஜெட்:
பிரமாண்ட பட்ஜெட்: இந்திய சினிமாவில் மிக பிரமாண்டமாக ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், தற்போது விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
3/6
வெறிச்சோடிய தியேட்டர்கள் :
வெறிச்சோடிய தியேட்டர்கள் : டாக்ஸிக் படத்தின் முதல் ஷோவின்போதே ஆன்லைனில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், 2வது நாளே படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 60% முதல் 75% வரை தலைகீழாகக் கடுமையான சரிவைக் கண்டது.
4/6
பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்:
4 நாட்கள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்: கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்ட இப்படம், வெளியாகி 4 நாட்கள் முடிந்த நிலையிலும் இந்திய அளவில் வெறும் ரூ.190.45 கோடி மட்டுமே நிகர வசூல் செய்து பின்தங்கியுள்ளது.
5/6
பலவீனமான திரைக்கதை:
பலவீனமான திரைக்கதை: படம் முழுக்க வன்முறையும், குழப்பமான காட்சிகளும் நிறைந்திருந்ததால், பொதுமக்களும் விமர்சகர்களும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களையே அள்ளி வீசினர்.
6/6
நடிகர் யாஷ்ஷின் மாஸ்
கேஜிஎஃப் (KGF) நகல் என்ற விமர்சனம்: நடிகர் யாஷ்ஷின் மாஸ் ஆளுமைக்காகவும், KGF படத்தின் பாணியை அப்படியே நகலெடுக்க மாதிரி காட்சி அமைப்புகள் இருந்ததாலும், ரசிகர்களை படம் கவரவில்லை. கதையில் எந்த விறுவிறுப்பும் இல்லாத காரணத்தால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாக்ஸிக், டாக்ஸிக் விமர்சனங்களால் வீழ்ந்தது.