New Ration Card : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
New Ration Card : புதிய ரேஷன் கார்டுக்கு எளிமையாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/7
மின்னணு அட்டை
தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpds.gov.in பக்கத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் உள்ள ‘மின்னணு அட்டை சேவைகள்’ பிரிவின் கீழ் ‘மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ (Apply New Smart Card) என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
2/7
மொபைல் எண்
குடும்பத் தலைவரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்), தந்தை/கணவர் பெயர் ஆகியவற்றை உள்ளிடவும். முழுமையான முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம் மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் (PIN Code) ஆகியவற்றைச் சரியாகப் பதிவிடவும். பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணை உள்ளிட்டு சரிபார்க்கவும்.
3/7
சர்க்கரை அட்டை
உங்களுக்குத் தேவையான ரேஷன் அட்டை வகையைத் தேர்வு செய்யவும். அதாவது, அனைத்துப் பொருட்களும் பெற PHH / NPHH அரிசி அட்டை, அரிசி தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மட்டும் பெற NPHH-S சர்க்கரை அட்டை, அடையாளச் சான்றாக மட்டும் பயன்படுத்த NPHH-NC பொருளற்ற அட்டை.
4/7
மின் கட்டண ரசீது
குடும்பத் தலைவர் புகைப்படம் 5 MB அளவுக்குள் உள்ள பாஸ்போர்ட் அளவு புகைப்படம். இருப்பிடச் சான்றுக்கு ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது, கேஸ் ரசீது அல்லது வாடகை ஒப்பந்தப் பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று கொடுக்கவும். கேஸ் சிலிண்டர் இணைப்பு இருப்பின் அதன் நுகர்வோர் எண் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
5/7
உறுப்பினரைச் சேர்க்க
‘உறுப்பினரைச் சேர்க்க’ என்பதைக் கிளிக் செய்து, குடும்ப உறுப்பினர்களின் பெயர், பிறந்த தேதி, தலைவருடனான உறவுமுறை ஆகியவற்றைப் பதிவு செய்யவும். 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டை எண்களைப் பதிவு செய்து, அவற்றின் நகல்களைப் பதிவேற்றவும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் அவசியம்.
6/7
விதிமுறைகளை ஏற்று ‘பதிவு செய்’
பதிவு செய்த அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து, விதிமுறைகளை ஏற்று ‘பதிவு செய்’ பட்டனைக் கிளிக் செய்யவும். விண்ணப்பம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்டதும், திரையில் ஒரு விண்ணப்பக் குறிப்பு எண் தோன்றும், அதை எதிர்காலக் கண்காணிப்புக்காகக் குறித்து வைத்துக்கொள்ளவும்.
7/7
மொபைல் எண்
உங்கள் விண்ணப்பத்தை வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் நேரில் அல்லது ஆவணங்கள் வாயிலாக ஆய்வு செய்வர். சரிபார்ப்பு முடிந்ததும் விண்ணப்பம் ஏற்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும்; தொடர்ந்து தாலுகா அலுவலகம் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ புதிய ஸ்மார்ட் கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்.