தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நிற்காமல் சுங்கக் கட்டணம் செலுத்தும் MLFF முறையை அறிமுகப்படுத்த NHAI புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
1/5
சுங்கச்சாவடிகளில் இனி நிற்க வேண்டாம்
1. சுங்க கட்டண வசூலில் புதிய மாற்றத்தை NHAI கொண்டு வருகிறது.
2. வாகனங்கள் நிற்காமல் செல்லும் வகையில் MLFF தொழிநுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
3. நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பாதைகள் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டுள்ளது.
2/5
MLFF கட்டண முறை?
1. மல்டி லேன் ஃப்ரீ ஃபுளோ (MLFF) மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் பயணிக்கலாம்.
2. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாகனங்கள் கடக்கும்போதே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்.
3. கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும்.
3/5
புதிய திட்டங்களில் MLFF கட்டாயம்!
1. புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் தகுதியான கட்டுமான திட்டங்களில் MLFF முறையை செயல்படுத்த ஏற்பாடு.
2. வாகனங்கள் நிற்காமல் செல்வதால் காத்திருப்பு நேரம் குறையும்.
3. எரிபொருள் செலவு குறைவதுடன், நெடுஞ்சாலை பயணமும் எளிதாகும்.
4/5
சுங்கச்சாவடிகளுக்கு புதிய தரநிலைகள்!
1. சுங்கச்சாவடி அமைப்பு மற்றும் கட்டண வசூல் பாதைகளுக்கு புதிய வழிமுறைகள்.
2. மேல்நிலை கட்டமைப்பு, சாலை வசதிகள், மின்விளக்குகள் மற்றும் வழிகாட்டி பலகைகளுக்கு சீரான தரநிலைகள்.
3. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுங்கச்சாவடி வடிவமைப்பை கொண்டுவர NHAI நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
5/5
தடையில்லா பயணம்!
1. வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லாததால் குறைவான சுங்கப் பாதைகளே போதுமானதாக இருக்கும்.
2. சுங்கச்சாவடிகளுக்கான இடத்தை சிறப்பாக பயன்படுத்த முடியும். போக்குவரத்து நெரிசல் மற்றும் காத்திருப்பு நேரத்தை குறைக்க MLFF உதவும்.
3. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணத்தை வேகமாகவும் வசதியாகவும் மாற்ற NHAI திட்டம்.