TN Govt Education Loan: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான IIT, IIM, NIT பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். எனவே, இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம், என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து பார்ப்போம்.
TN Govt Education Loan: இத்திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
1/5
IIT, IIM, IIIT, NIT படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பி.வ, மி.பி.வ மற்றும் சீ.ம இன (BC, MBC /DNC) மாணவ, மாணவிகள் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (Fresh and Renewal Application) விண்ணப்பிக்கலாம் என நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
2/5
மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு / பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். உள்ள BC, MBC / DNC மாணவர்களுக்கு கற்பிப்புக் கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணங்கள் என ஆண்டுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
3/5
கல்வி உதவித்தொகை பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் சென்னை -5, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை -5. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மையினர் நல அலுவலகம்) ஆகிய இடங்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
4/5
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்கலாம்?
மேலும், www.bcw.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மத்திய/மாநில அரசின் இதர கல்வி உதவித் தொகை திட்டங்களில் பயன்பெறும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.
5/5
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனம் Bonafide Certificate உடன் பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும். Renewal விண்ணப்பங்கள் 31.10.2026-க்குள், Fresh விண்ணப்பங்கள் 30.11.2026-க்குள் அனுப்பப்பட வேண்டும். Semester கட்டண ரசீதுகள் 15.01.2027-க்குள் அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.