• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அரசு விடுமுறை.. பள்ளி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு.. சிறப்பு வகுப்புகளுக்கு முற்றிலும் தடை!

அரசு விடுமுறை.. பள்ளி மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு.. சிறப்பு வகுப்புகளுக்கு முற்றிலும் தடை!

Written ByUmabarkavi K
Published: Oct 19, 2026, 01:07 PM IST|Updated: Oct 19, 2026, 01:14 PM IST
joinshare
TN School Special Classes: அரசு விடுமுறை நாட்களில் நேரடி மற்றும் ஆன்லைன் வாயிலாக சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை விதித்து தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து தனியார் சுயநிதி மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN School Special Classes: இந்த உத்தரவை மீறி அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

TN School Special Buses1/5

பள்ளி மாணவர்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, வார இறுதி நாட்களுடன் சேர்த்து அக்டோபர் 19, அக்டோபர் 20ஆம் தேதி நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் விடுமுறையில் இருக்கின்றனர். இந்த நான்கு நாட்கள் விடுமுறையில் மாணவர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தது.
TN School Special Buses2/5

மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

இதனை அடுத்து, தற்போது அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு விடுமுறை நாட்களில் நேரடி, இணையவழியில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தனியார் சுயநிதி மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
TN School Special Buses3/5

சிறப்பு வகுப்புகள் நடத்த முற்றிலும் நடத்த தடை

எனவே, அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி எவ்வித பள்ளியும் செயல்படக் கூடாது எனவும், அவ்வாறு மீறி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது.
TN School Special Buses4/5

உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

ஏற்கனவே, அரையாண்டு, காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த வண்ணம் உள்ளன. அப்போதும் இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுக்கிறது. இதனை மீறி தான், தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அப்படி தான், இந்த விடுமுறை நாட்களை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
TN School Special Buses5/5

அக்டோபர் 21ஆம் தேதி பள்ளிகள் இயங்கும்

அக்டேபர் 21ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு, அக்டோபர் 22ஆம் தேதி பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Education

Trending

  • News
  • Photos
  • Videos
வங்கியில் வேலை! ரூ.5 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்..

வங்கியில் வேலை! ரூ.5 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்..

2

டிசம்பரில் சென்னைக்கு பெரிய ஆபத்து? இந்த பகுதிக்கு எச்சரிக்கை! நிபுணர்கள் வார்னிங்

3

தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு குட் நியூஸ்! CM விஜய் அறிவித்த புதிய திட்டங்கள்.. என்னென்ன?

4

"2 ஆண்டில் பணம் இரட்டிப்பு": தமிழ்நாட்டில் பரவும் கவர்ச்சி விளம்பரங்கள் – அரசு எச்சரிக்கை

5

ஜனவரி மாத திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு! ஸ்ரீவாரி தேவஸ்தானம் தகவல்..எப்படி புக் செய்வது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.