• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /OTT Horror Movies: 1972ல் நடந்த நிஜ திகில் சம்பவம் - நெட்ஃபிளிக்ஸில் உள்ள த்ரில்லர் படம்!

OTT Horror Movies: 1972ல் நடந்த நிஜ திகில் சம்பவம் - நெட்ஃபிளிக்ஸில் உள்ள த்ரில்லர் படம்!

Written ByKarthikeyan Sekar
Published: Aug 23, 2026, 05:55 PM IST|Updated: Aug 23, 2026, 06:04 PM IST
joinshare
OTT Horror Movies: நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் உள்ள ஒரு திரில்லர் படம் உங்களை சீட் நுனியில் உட்கார வைத்து அலற வைத்துவிடும். அது என்ன படம் என்பதைஇங்கே தெரிந்து கொள்ளுங்கள்

OTT Horror Movies: திரில்லர் படங்களை வெகுவாக ரசிப்பவர்களையே சீட் நுனியில் உட்கார வைத்து அலற வைக்கும் படம் ஒன்றைப் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம். இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸில் உள்ளது. 
 

OTT Horror Movies1/7

திகில் விரும்பிகளுக்கு ஒரு புதிய விருந்து

திரையரங்குகளுக்குச் செல்வதை விடவும் வீட்டில் இருந்தபடியே வார இறுதியை ஓடிடி தளங்களில் கழிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் குவிந்து கிடக்கும் ஓடிடி தளங்களில் எந்த படத்தைப் பார்ப்பது என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும்.
Netflix Movies2/7

டெத் விஸ்பரர் 3

அந்த வரிசையில், திகில் மற்றும் சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களைக் கவரும் வகையில் தற்போது 'டெத் விஸ்பரர் 3' (Death Whisperer 3) திரைப்படம் வெளியாகியுள்ளது. மொத்தம் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம் தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களுக்குத் திகிலூட்டும் ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது.
Death Whisperer3/7

1972ல் நடந்த உண்மைச் சம்பவம்!

பொதுவாக ஹாரர் திரைப்படங்கள் பலவும் வெறும் திரைக்கதைக்காக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைகளாகவே இருக்கும். ஆனால் 'டெத் விஸ்பரர் 3' திரைப்படத்திற்கு கூடுதல் அச்சமூட்டும் விஷயமாக அமைந்திருப்பது இது ஒரு உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவானது என்பதுதான். இதன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பிரபல நாவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவான நிலையில், இந்த மூன்றாவது பாகம் 1972ஆம் ஆண்டு தாய்லாந்தில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் மற்றும் மர்மமான உண்மைச் சம்பவங்களை மையக்கருவாகக் கொண்டு மிக நேர்த்தியாகத் திரையில் வடிக்கப்பட்டுள்ளது.
Death Whisperer OTT4/7

படத்தின் விறுவிறுப்பான கதைக்களம்

படத்தின் முதன்மைக் கதாநாயகனான யாக், தனது அன்பான சகோதரியுடன் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது தங்கை கொடூரமான மற்றும் மர்மமான சூழலில் கடத்தப்படுகிறார். எங்கு தேடியும் கிடைக்காத தனது தங்கையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் யாக் களமிறங்குகிறார். அங்கு தொடங்கும் அவரது தேடல், சாதாரண மனிதர்களுடனான மோதலாக இல்லாமல், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்திகளை நோக்கிய ஆபத்தான பயணமாக மாறுகிறது.
Tamil Horror movies5/7

சபிக்கப்பட்ட கிராமமும் கொடூர ஆவிகளுடனான சண்டையும்

தனது தங்கையைக் காப்பாற்றும் நோக்கில், பல தசாப்தங்களாகத் தீய சக்திகளால் சூழப்பட்டு மனிதர்கள் செல்லவே அஞ்சும் ஒரு சபிக்கப்பட்ட கிராமத்திற்கு யாக் செல்கிறார். அந்த விசித்திரமான கிராமத்தில் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகளும், தன் தங்கையை மீட்கும் வழியில் குறுக்கிடும் பயங்கரமான பேய்கள் மற்றும் துர் ஆவிகளுடன் யாக் நடத்தும் வாழ்வா சாவா போராட்டமுமே படத்தின் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன. இறுதியில் அவர் தன் தங்கையை மீட்டாரா, இல்லையா என்பதே படத்தின் முடிவாகும்.
Tamil Cinema News6/7

'தி கன்ஜுரிங்' படங்களை மிஞ்சும்

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற "தி கன்ஜுரிங்" (The Conjuring) அல்லது "இன்சிடியஸ்" (Insidious) போன்ற கிளாசிக் திகில் படங்களை ரசித்துப் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பெரும் விருந்தாக அமையும். பார்வையாளர்களை அடுத்த வினாடி என்ன நடக்கும் என சீட் நுனியில் அமர வைக்கும் எண்ணற்ற 'ஜம்ப் ஸ்கேர்' (Jump Scare) தருணங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் இணைந்து ஒலிக்கும் அமானுஷ்யமான பின்னணி இசை, இரவு நேரத்தில் தனியாகப் பார்க்கும் பார்வையாளர்களின் பயத்தை இரட்டிப்பாக்கும் பெரும் பலமாக அமைந்துள்ளது.
Netflix Movies7/7

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்டீரிமிங் விவரங்கள்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம், தற்போது உலகளாவிய அளவில் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ஸ்டீமிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதத் தொடக்கமான 4-ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் இந்த 'டெத் விஸ்பரர் 3' திரைப்படம், ஓடிடி தளத்தின் டாப் டிரெண்டிங் படங்களின் பட்டியலில் வேகமாக இடம்பிடித்து திகில் பட ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.