• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /பழனி முருகன் கோயில் தரிசனத்தில் மாற்றம்! காலை 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது.. அதிரடி அறிவிப்பு

பழனி முருகன் கோயில் தரிசனத்தில் மாற்றம்! காலை 11 மணிக்கு மேல் அனுமதி கிடையாது.. அதிரடி அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Oct 17, 2026, 03:00 PM IST|Updated: Oct 17, 2026, 03:30 PM IST
joinshare
Palani Murugan Temple: பழனி முருகன் கோயிலில் அக்டோபர் 20ஆம் தேதி விஜயதசமி அன்று காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக்கோயில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, இதற்கு ஏற்ப பக்தர்கள் தங்கள் தரிசனத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

Palani Murugan Temple: அக்டோபர் 20ஆம் தேதி விஜயதசமி அன்று மலைக்கோயிலில் நண்பகல் 12.00 மணிக்கு உச்சிக்கால பூஜையும், அதனை தொடர்ந்து பிற்பகல் 01.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற உள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 

Palani Murugan Temple1/5

பழனி முருகன் கோயில்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அறுபடை வீடுகளில் ஆறுபடை வீடாக பழனி முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்கள், விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அவ்வப்போது, பழனி முருகன் கோயில் நிர்வாகம் பக்தர்கள் தரிசனத்தில் சில மாற்றங்களை செய்து வருகிறது.
Palani Murugan Temple2/5

பழனி முருகன் கோயில்

அந்த வகையில், பழனி முருகன் கோயில் நிர்வாகம் தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, 20.10.2026 விஜயதசமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Palani Murugan Temple3/5

பழனி முருகன் கோயில்

அதன்படி, அக்டோபர் 20ஆம் தேதி விஜயதசமி அன்று மலைக்கோயிலில் நண்பகல் 12.00 மணிக்கு உச்சிக்கால பூஜையும், அதனை தொடர்ந்து பிற்பகல் 01.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற உள்ளது. மேலும் பிற்பகல் 02.45 மணிக்கு பராசக்தி வேல் புறப்பாடு நடைபெற்று சன்னதி திருக்காப்பிடப்படும். பராசக்தி வேல் கோதைமங்கலம் சென்று அம்பு போட்டு புறப்பாடாகி மலைக்கோயிலுக்கு திரும்ப வந்த பின் இராக்கால பூஜை நடைபெறும்.
Palani Murugan Temple4/5

பழனி முருகன் கோயில்

இதனால் மலைக்கோயிலில் அனைத்து கட்டணச்சீட்டுகள் விற்பனையும் காலை 11.30 மணிக்கு நிறுத்தப்படும். எனவே அன்றைய தினம் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காலை 11.00 மணி வரை மட்டுமே மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு ஏற்ப பக்தர்கள் தங்கள் தரிசனத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Palani Murugan Temple5/5

பழனி முருகன் கோயில்

வார இறுதி நாட்கள், ஆயுத பூஜை, விஜயதசமி அடுத்தடுத்து பண்டிகை வருகிறது. இதனால், தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் பழனி முருகன் கோயிலில் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, பழனி முருகன் கோயிலில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.