• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அண்ணா அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்தார்? சுவாரஸ்ய தகவல்கள்..!

அண்ணா அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்தார்? சுவாரஸ்ய தகவல்கள்..!

Written ByYuvashree M
Published: Sep 15, 2026, 09:53 AM IST|Updated: Sep 15, 2026, 10:17 AM IST
joinshare
தமிழ்நாட்டின் நிரந்தர தலைவராக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்தான், பேரறிஞர் அண்ணா. இவருக்கு, செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தார். இந்த நாளில், இவர் குறித்து யாருக்கும் தெரியாத தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

எழுத்தால் பல லட்சம் மக்களை ஆண்ட பெருந்தலைவர் மற்றும் பேரறிஞராக திகழ்பவர்தான் அறிஞர் அண்ணா. இவர் பெயரை கேட்டால், எதிராளிக்கு முதலில் வெறுப்பு, பயம் போன்ற உணர்வுகளுக்கு பதிலாக மரியாதைதான் வரும். அப்படி, தன்னை எதிர்ப்பவர்களையும் வசியப்படுத்தக்கூடிய குணம் கொண்டவர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவர் குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

அண்ணாதான் தமிழ்நாட்டை ஆள்கிறான் என அர்த்தம்-சூளுரை1/5

Anna's Vow about Tamil Nadu

பெரியாரின் சீடராகவும், தமிழ்நாட்டின் தலைவராகவும் இருந்தவர் பேரறிஞர் அண்ணா. மக்களின் நலனுக்காக எப்போதும் ஓயாது குரல் கொடுத்த மாபெரும் தலைவர் இவர். ”மக்கள் வெகுண்டெழுவார்களே எனும் அச்சம் இருக்கும் வரையில், இங்கே யர் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” என்ற அவருடைய கர்ஜனை உண்மை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்போது அவர் பற்றிய சில முக்கிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
பெரியார் குறித்து அண்ணா பேச்சு2/5

Anna's speech about Periyar

”என்னுடைய வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர், பெரியார்” என்று அண்ணா ஒருமுறை அறிவித்திருந்தார். அவரைவிட்டு பிரிந்து, தனியாக கட்சியை கண்டபோதும், அவர் தலைமை நாற்காலியை பெரியாருக்காகவே காலியாக வைத்திரூந்தார். அண்ணா காலமானது வரையில், திமுகவிற்கு தலைவர் என்று ஒருவர் அறிவிக்கப்படவே இல்லை.
அண்ணா வளர்த்த மிருகங்கள்3/5

Animals Raised by Anna

அண்ணா, இரண்டு மயில்கள், இரண்டு மான்கள், புறாக்கள், நாய் ஆகியவற்றை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து, அவரது படுக்கையை சுற்றி வந்த நாய், இறந்து போனது.
அண்ணா அரசியலுக்கு வரும் முன் செய்த தொழில்4/5

The profession Anna pursued before entering politics

அறிஞர் அண்ணா அரசியலுக்கு வருவதற்கு முன்பு, நெசவு மற்றும் தையல் தொழில் செய்தார். அந்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இத்தொழில் கைவந்த கலையாக இருந்தது. இது குறித்து அவர் ஒருமுறை பேசும் போது “என்னுடைய அளவுக்கு மீறிய பொறுமைக்கு இதுதான் காரனம். நூல் அறுந்துவிடக்கூடாது என்பதற்காக நெசவாளி, எப்போதும் இப்படித்தான் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பான்” என பேசியிருந்தார்.
அண்ணா பேசியதிலேயே சிறிய உரை இதுதான்5/5

This is the shortest speech Anna ever delivered

அண்ணாவின் பேச்சுக்கு, பலர் அடிமை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவரால் ஒரு கருத்தை பல மணி நேர பேச்சாகவும் மாற்றாத்தெரியும், 5 விநாடிகளுக்குள் முடிக்கும் சொற்றொடராகவும் சொல்லத்தெரியும். அதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு, அதில் ஒன்று. “காலமோ சித்திரை, நேரமோ பத்தரை, உங்களுக்கோ நித்திரை, போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை” என்று ஐந்தே நொடிகள்தான் பேசினார்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.