PM Internship Scheme : மாதம் 9 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதம மந்திரியின் இன்டர்ன்ஷிப் திட்டம் தொடர்பான முக்கிய அப்டேட்
PM Internship Scheme : படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 9 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதம மந்திரியின் இன்டர்ன்ஷிப் திட்டம் குறித்த அப்டேட் தமிழ்நாடு அரசிடமிருந்து வெளியாகியுள்ளது. முழு விவரம்
1/5
புதிய தொடக்கம்
கனவுப் பயணத்திற்குப் புதிய தொடக்கம் - வெறும் பட்டப்படிப்போடு நின்றுவிடாமல், நேரடி வேலைவாய்ப்புக்கான அனுபவத்தைப் பெற இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளது. 'வெறும் கையோடு போகாதீங்க... அனுபவத்தோடு போங்க!' என்ற முழக்கத்துடன் அறிமுகமாகியுள்ள பிரதம மந்திரியின் இன்டர்ன்ஷிப் திட்டம், உங்கள் தொழில் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தருகிறது.
2/5
நேரடிப் பயிற்சி
முன்னணி நிறுவனங்களில் நேரடிப் பயிற்சி - நாட்டின் முன்னணி நிறுவனங்களில் 6 அல்லது 9 மாதங்கள் தொழிற்பயிற்சி பெறும் வாய்ப்பு இதில் வழங்கப்படுகிறது. நிஜமான பணிச்சூழலில் நேரடியாகக் களமிறங்கிப் பணியாற்றுவதன் மூலம், கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் நடைமுறைத் திறன்களையும் அனுபவத்தையும் எளிதாக வளர்த்துக்கொள்ளலாம்.
3/5
பல்வேறு துறைகளில் வாய்ப்புகள்
பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் - தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, மேலாண்மை, நிதி உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இளைஞர்கள் தங்களின் கல்வித் தகுதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப பொருத்தமான துறையைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி பெற்றுத் தங்களின் தொழில்சார் திறன்களை மெருகேற்றிக் கொள்ள முடியும்.
4/5
ஊக்கத்தொகை
மாதம் ரூ.9,000 நிதியுதவி மற்றும் ஊக்கத்தொகை - இப்பயிற்சியில் இணையும் இளைஞர்களுக்கு மாதம் தோறும் ₹9,000 உதவித்தொகை (Stipend) நேரடியாக வழங்கப்படுகிறது. இது தவிர, கூடுதல் ஊக்கமாகப் பயிற்சியின் தொடக்கத்தில் ஒருமுறை நிதியுதவியாக ₹6,000 வழங்கப்பட்டு முழுமையான நிதி ஆதரவு உறுதி செய்யப்படுகிறது.
5/5
இன்றே விண்ணப்பியுங்கள்
இன்றே விண்ணப்பியுங்கள் - படிக்கும் போதே பணி அனுபவத்தைப் பெற்று வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற உடனே விண்ணப்பியுங்கள்! விருப்பமுள்ளவர்கள் pminternship.mca.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்; கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 1800 116 090 என்ற இலவச உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.