'பொன்னியின் செல்வன் - காலத்தின் வழித்தடம்' என்ற பெயரில் வந்தியத்தேவனின் வரலாற்றுப் பயணத்தை ஒட்டி தஞ்சாவூரில் ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை பல்வேறு சுற்றுலாவை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் வரலாற்று சுற்றுலாவையும் அரசு ஏற்பாடு செய்கிறது. பொன்னியன் செல்வன் வந்தியதேவனின் வரலாற்றுப் பயணத்தையொட்டியும் சிறப்பு சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது.
1/5
பொன்னியின் செல்வன் தொடர்..
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி எழுத்தில் 1950ஆம் ஆண்டு முதல் 1955ஆம் ஆண்டுவரை 'கல்கி' வார இதழில் 'பொன்னியின் செல்வன்' என்ற வரலாற்றுத் தொடர் வெளியானது.
2/5
நாவலும், திரைப்படமும்...
இந்த தொடருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், நாவலாகவும் வெளியானது. இந்த நாவலை அடிப்படையாக வைத்து பொன்னியன் செல்வன் என்ற பெயரில் இரண்டு பாகங்களாக மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படங்களும் வெளியானது.
3/5
தஞ்சாவூரில் ஒருநாள் சுற்றுலா
இந்நிலையில், பொன்னியன் செல்வன் நாவலின் முக்கிய கதாபாத்திரமாக அறியப்படும் வந்தியத்தேவனின் வரலாற்றுப் பயணத்தை மீண்டும் அனுபவிக்கும் வகையில் 'பொன்னியின் செல்வன் - காலத்தின் வழித்தடம்' என்ற ஒர நாள் சிறப்புச் சுற்றுலா தஞ்சாவூரில் தொடங்கி தஞ்சாவூரிலேயே முடியும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது.
4/5
எங்கெல்லாம் போகலாம்?
இந்த சுற்றுலாவில் பயணிகள் வீரநாராயணன் ஏரி, உடையார்குடி, கடம்பூர், குடந்தை, திருப்புறம்பியம், நாதன் கோவில், பழையாறை, உடையாளூர், தஞ்சை பெரிய கோவில் முக்கிய இடங்கள் இதில் அடங்கும். குளிரூட்டப்பட்ட போக்குவரத்து வசதி, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு மற்றும் துறைசார் நிபுணரின் வழிகாட்டுதல் ஆகிய சேவையும் வழங்கப்படும்.
5/5
சுற்றுலாவுக்கான கட்டணம் எவ்வளவு?
இந்த சுற்றுலா வரும் அக்டோபர் 31ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை நடைபெறும். இந்த சுற்றுலாவுக்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. 9489129765,9176995873 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். படத்தில் காணும் QR-Code ஸ்கேன் செய்தும் முன்பதிவு செய்யலாம்.