• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /’மேகமோ அவள்’.. சிவப்பு புடவையில் பிரியா பவானி சங்கர்! வைரலாகும் திருமண போட்டோஸ்

’மேகமோ அவள்’.. சிவப்பு புடவையில் பிரியா பவானி சங்கர்! வைரலாகும் திருமண போட்டோஸ்

Written ByR Balaji
Published: Nov 11, 2026, 01:26 PM IST|Updated: Nov 11, 2026, 01:29 PM IST
joinshare

Priya Bhavani Shankar Marriage: 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் - ராஜ்வேல் ஜோடி இன்று நவம்பர் 11ஆம் தேதி திருமணம் செய்துகொண்டதாக வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
 

Priya Bhavani Shankar Marriage 1/5

10 ஆண்டு கால காதல்.. பிரியா பவானி சங்கருக்கு இன்று திருமணம்!

நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மருதாணி வைத்த கைகளுடன் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில் ‘யாரோ யாரோடி உன்னோட புருஷன்’ என்ற பாடல் இடம்பெற்றிருந்த நிலையில், அவருக்கு திருமணமா என்று ரசிகர்கள் நடைபெற இருக்கிறதா என பேச தொடங்கினர்.
Priya Bhavani Shankar Marriage 2/5

சிவப்பு பட்டுப்புடவையில் பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் சிவப்பு நிற பட்டுப்புடவையில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்று (நவம்பர் 11) சமூக வலைத்தளப் பக்கங்களில் பரவி வருகின்றன. இவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
Priya Bhavani Shankar Marriage 3/5

தீபாவளியன்று பிரியா பவானி சங்கர் பகிர்ந்த போட்டோ!

தீபாவளியன்று காதலர் ராஜ்வேலுடன் மல்லிகைப்பூ மாலை அணிந்தபடி, பின்னால் இருந்த ஒருவர் வாழ்த்துபடியும் ஓர் புகைப்படத்தை பிரியா பவானி சங்கர் பகிர்ந்திருந்தார். அதேபோல், ‘இந்த தீபாவளி கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்’ என அவர் குறிப்பிட்டதால், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
Priya Bhavani Shankar Marriage 4/5

10 ஆண்டுகளுக்கும் மேலான காதல்.. யார் இந்த ராஜ்வேல்?

கல்லூரியில் படித்தபோது பிரியா பவானி சங்கருக்கும் ராஜ்வேலுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருகின்றனர். வெளிநாட்டு பயணங்கள், ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் என தங்களின் காதலை இருவரும் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பகிர்ந்து வந்துள்ளனர்.
Priya Bhavani Shankar Marriage 5/5

இன்று திருமணம்.. வெளியான வீடியோ!

நவம்பர் 11 ஆம் தேதி பிரியா பவானி சங்கர் - ராஜ்வேல் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து இருவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இந்த நிலையில், அவர்களின் திருமண வீடியோ வெளியாகி உள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கபப்ட்ட இந்த ஜோடியின் திருமணம் தற்போது நடைபெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.