• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /புதுச்சேரி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு: என்ன கிடைக்கும்? எப்படி பெறுவது?

புதுச்சேரி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு: என்ன கிடைக்கும்? எப்படி பெறுவது?

Written BySripriya Sambathkumar
Published: Oct 16, 2026, 12:29 PM IST|Updated: Oct 16, 2026, 12:32 PM IST
joinshare
Puducherry Diwali Gift: தீபாவளி பரிசுத் தொகுப்பில் 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலைப்பட்ருப்பு, 3 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், 1/2 கிலோ ரவை மற்றும் 1/2 கிலோ மைதா ஆகிய 5 மளிகைப் பொருட்கள் இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Puducherry News: குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த தொகுப்பு அளிக்கபப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சம் குடும்பங்களுக்கு இந்த மளிகை பரிசு தொகுப்பு அளிக்கப்படும்.

Puducherry News1/8

புதுச்சேரி

புதுச்சேரி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. புதுச்சேரியில் 3 லட்சம் குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக சிறப்பு தொகுப்பு அளிக்கப்படும் என்றும் இதில் 5 மளிகை பொருட்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Puducherry Diwali Gift2/8

புதுச்சேரி மக்களுக்கு தீபாவளி பரிசு

குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த தொகுப்பு அளிக்கபப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சம் குடும்பங்களுக்கு இந்த மளிகை பரிசு தொகுப்பு அளிக்கப்படும்.
Diwali Gift Hamper Grocery Items List3/8

தீபாவளி பரிசுத் தொகுப்பில் என்னவெல்லாம் இருக்கும்?

தீபாவளி பரிசுத் தொகுப்பில் 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலைப்பட்ருப்பு, 3 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், 1/2 கிலோ ரவை மற்றும் 1/2 கிலோ மைதா ஆகிய 5 மளிகைப் பொருட்கள் இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Puducherry: Where to get Diwali gift?4/8

தீபாவளி சிறப்பு தொகுப்பு எங்கு கிடைக்கும்?

தீபாவளி சிறப்பு தொகுப்பின் விநியோகம் வழக்கம் போல் ரேஷன் கடைகள் மூலமாகவே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு நேரடியாக பொதுமக்கள் கையில் கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Diwali Gift5/8

தீபாவளி தொகுப்பு

தீபாவளி தொகுப்புகளை வழங்குவதில் கடந்த காலங்களில் சில கடைசி நேரக் குழப்பங்கள் இருந்தன. அப்படிப்பட நிலையை தவிர்க்க, இந்த ஆண்டு முன்கூட்டியே, அதாவது கடந்த மாதமே குடிமைப்பொருள் வழங்கல் துறை தனது ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகின்றது.
Diwali Gift Hampers6/8

தீபாவளிப் பரிசுத் தொகுப்பு

தீபாவளிப் பரிசுத் தொகுப்புகளுக்காக ஒப்புதலை பெற, தற்போது நிதித் துறைக்கு, இது சார்ந்த கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. நிதித் துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன் இதற்கான டெண்டர் கோரும் பணிகள் தொடங்கும்.
Puducherry Government Expenditure for Diwali Gift7/8

தீபாவளி பரிசுத் தொகுப்புக்கு புதுச்சேரி அரசுக்கு எவ்வளவு செலவாகும்

புதுச்சேரியில் மொத்தம் 2,62,313 ரேஷன் கார்டுகளும், காரைக்காலில் மொத்தம் 60,221 கார்டுகளும், மாகி பகுதியில் 7,980, ஏனாமில் 15,460 கார்டுகளுமாக மொத்தம் 3,45,974 ரேஷன் கார்டுகள் உள்ளன. தீபாவளி இலவச தொகுப்புக்கு இந்த மொத்த கார்டுகளிலிருந்து அரசுப் பணியாளர்கள் மற்றும் கவுரவ ரேஷன் அட்டைதாரர்கள் போன்றோர் நீக்கப்படுவார்கள். அதன் பிறகு சுமார் 3 லட்சம் ரேஷன் அட்டைதார்ரகளுக்கு இலவச தீபாவளிப் பரிசுத் தொகுப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு சுமார் 23 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Puducherry Ration Shops8/8

புதுச்சேரி ரேஷன் கடைகள்

புதுச்சேரியில் முடங்கியிருந்த ரேஷன் கடைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டு, அரிசி விநியோகம் பணி தொடங்கியது. சிவப்பு கார்டுக்கு 20, மஞ்சள் கார்டுக்கு 10 கிலோ இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.
TAGS:
Puducherry

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.