Rahu Ketu Transit: இன்னும் சில நாட்களில் ராகு, கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. இதன் தாக்கத்தால் 7 ராசிகளுக்கு மிகச் சிறந்த நன்மைகள் நடக்கவுள்ளன, அந்த அதிர்ஷ்ட ராசிகளின் பட்டியலில் உங்கள் ராசியும் உள்ளதா?
Rahu Ketu Peyarchi: டிசம்பர் 5-ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 7:28 மணிக்கு ராகு மற்றும் கேது புதிய ராசிகளுக்குப் பெயர்ச்சி அடைகின்றனர். இந்தப் பெயர்ச்சியின் போது, ராகு கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் மாறுகின்றனர். ராகு மற்றும் கேது 'நிழல் கிரகங்கள்' (சாயா கிரகங்கள்) என்று அழைக்கப்படுகின்றன. இவை எப்போதும் ஒன்றுக்கொன்று நேர் எதிரே, ஏழு ராசிகள் இடைவெளியில் அமைந்திருப்பதால், இவற்றின் ராசி மாற்றங்கள் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. ராகு பெயர்ச்சி, கேது பெயர்ச்சி பெயர்ச்சி ராசிகளில் வேலை, தொழில் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
1/11
ராகு, கேது பெயர்ச்சி
ராகு மற்றும் கேது பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அற்புதமான நன்மைகள் நிகழும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
2/11
மேஷம்
மேஷ ராசியினருக்கு, ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி தொழில் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். எதிர்காலத்திற்குப் பயனுள்ள பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். இருப்பினும், அவசரப்பட்டு வேலையை மாற்றுவதையோ அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பதையோ தவிர்க்கவும்.
3/11
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு, ராகு பெயர்ச்சியும் கேது பெயர்ச்சியும் அதிர்ஷ்டத்திற்கும் கடின உழைப்பிற்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த உதவும். நீண்டகாலமாகத் தேங்கிக் கிடந்த பணிகள் இப்போது முன்னேற்றம் அடையலாம். வேலை மாற்றம் அல்லது புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
4/11
மிதுனம்
மிதுன ராசியினருக்கு ராகு, கேது பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். இருப்பினும் இந்த காலகட்டத்தில் நிதி மற்றும் குடும்ப விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொழில் வாழ்க்கையில் பணிச்சுமை அதிகரித்தாலும், வெற்றிகள் குவியும். வணிகத்தில் ஈடுபடுள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
5/11
கன்னி
கன்னி ராசியினருக்கு, இந்த காலம் ஆதாயங்களைப் பெறுவதற்கும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கும் சாதகமாக அமையலாம். ராகு பெயர்ச்சி மற்றும் கேது பெயர்ச்சியின் தாக்கத்தால் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். குழந்தைகள் மூலம் நன்மை கிடைக்கும். தொழில் வாழ்க்கையில், உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையக்கூடும். தொழில் செய்பவர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கலாம்.
6/11
துலாம்
ராகு கேது பெயர்ச்சியின் தாக்கத்தால் துலாம் ராசியினருக்கு, தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகிய இரண்டிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்; உங்கள் பணிச்சூழலில் உங்கள் பங்களிப்பு விரிவடையக்கூடும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். இந்த காலகட்டத்தில், உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுவது முக்கியம். குடும்பப் பொறுப்புகள் தொடர்பான செலவுகள் அதிகரிக்கலாம். இவை சுபச் செலவுகளாகவே இருக்கும்.
7/11
தனுசு
ராகு, கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு ஆதாயங்களை அள்ளிக்க்கொடுக்கும். இந்த காலகட்டத்தில் நிதி விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். ஆனால் பண வரவும் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் பல வெற்றிகள் குவியும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
8/11
மீனம்
மீன ராசியினருக்கு, இந்தப் பெயர்ச்சியானது வருமானம் மற்றும் குடும்ப விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். கடந்த காலத் தொடர்புகள் உங்களுக்குச் சாதகமாக அமையக்கூடும். பணியிடத்தில், உங்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம் அல்லது நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். போதிய புரிதல் இன்றி பங்குச் சந்தையிலோ அல்லது பிற முதலீட்டுத் திட்டங்களிலோ பணத்தைச் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
ஜோதிட நம்பிக்கைகளின்படி, ராகு மற்றும் கேது பெயர்ச்சியின் போது அவசரப்பட்டு பெரிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நிதி விஷயங்களில் கவனமாகச் செயல்படுங்கள். உறவுகளில் சந்தேகங்களோ அல்லது தவறான புரிதல்களோ ஏற்பட இடமளிக்க வேண்டாம். மேலும், உங்கள் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம்.
11/11
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.