• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ராணிப்பேட்டை : இலவச கறவை மாடு, ஆடுகள் பெற விண்ணப்பிக்கலாம்! - முழு விவரம்

ராணிப்பேட்டை : இலவச கறவை மாடு, ஆடுகள் பெற விண்ணப்பிக்கலாம்! - முழு விவரம்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 15, 2026, 14:31 IST|Updated: Nov 15, 2026, 14:36 IST
joinshare
Ranipet Free Cow and Goat Scheme 2026: ராணிப்பேட்டை இலவச கறவை மாடு, ஆடுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Ranipet Free Cow and Goat Scheme 2026: ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ். இலவச ஆடு, மாடுகள் பெற விண்ணப்பிக்கலாம். எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
 

Ranipet Free Cow and Goat Scheme1/5

இலவச கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம்

1. கிராமப்புறப் பெண்களுக்கு இலவச கறவை மாடு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம் - இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், திமிரி ஒன்றியத்தில் வசிக்கும் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இரண்டு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுவதாக இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Ranipet Free Cow and Goat Scheme2/5

கறவை மாடு வழங்கும் திட்டம்

2. விலையில்லா கறவை மாடு வழங்கும் திட்டத்தின் சிறப்பம்சங்கள் - கிராமப்புறப் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடு வழங்கும் திட்டத்தின் கீழ், 100% மானியத்தில் ரூ.50,000 மதிப்புள்ள கறவை மாடு வழங்கப்படுகிறது. இதனுடன் 2 ஆண்டுகளுக்கான காப்பீடு மற்றும் போக்குவரத்து, தீவனச் செலவிற்காக ரூ.3,000 நிதியுதவியும் அளிக்கப்படும். ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண், மாற்றுத்திறனாளிப் பெண் மற்றும் திருநங்கை ஆகியோருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
Ranipet Free Cow and Goat Scheme3/5

கறவை மாடு திட்டத்திற்கான தகுதிகள்

3. கறவை மாடு திட்டத்திற்கான தகுதிகள் - இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராகவும், வீட்டில் கறவை மாடு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மிகாமலும், 2.5 ஏக்கருக்கு மேல் சொந்த நிலம் இல்லாதவராகவும் இருப்பது அவசியம்.
Ranipet Free Cow and Goat Scheme4/5

ஆடு வளர்ப்புத் திட்டம்

4. வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம் மற்றும் தகுதிகள் - வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் வசிக்கும் ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண், திருநங்கை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 100% மானியத்தில் தலா 5 ஆடுகள் (ரூ.30,000 மதிப்பு), 2 ஆண்டுகள் காப்பீடு மற்றும் ரூ.4,500 'Seed Money' வழங்கப்படும். 18 முதல் 60 வயதுடைய, கோழி தவிர வேறு கால்நடைகள் மற்றும் சொந்த நிலம் இல்லாத, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குள் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
Ranipet Free Cow and Goat Scheme5/5

விண்ணப்பிக்கும் முறை

5. விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி - இவ்விரு திட்டங்களுக்கும் கால்நடை பராமரிப்புத்துறையின் இணையதளம் அல்லது செயலி வழியாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தகம், வட்டார கால்நடை மருத்துவமனை, கோட்ட அலுவலகம் அல்லது மாவட்ட கால்நடை அலுவலகத்தை அணுகி உதவி பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 05.12.2026 கடைசி நாளாகும்.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

2

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

3

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

4

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

5

திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.