• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /இன்றைய ராசிபலன் அக்டோபர் 14 புதன்கிழமை மேஷம் முதல் மீனம் வரை

இன்றைய ராசிபலன் அக்டோபர் 14 புதன்கிழமை மேஷம் முதல் மீனம் வரை

Written ByKarthikeyan Sekar
Published: Oct 14, 2026, 06:36 AM IST|Updated: Oct 14, 2026, 06:41 AM IST
joinshare
இன்றைய ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான தினசரி பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

இன்றைய ராசிபலன் அக்டோபர் 14 புதன்கிழமை 12 ராசிகளுக்குமான பொதுப்பலன்களை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
 

Rasipalan Today1/12

மேஷம்

மேஷம் : தொழில் மற்றும் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு வந்து மன மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பயணங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
Rasipalan Today2/12

ரிஷபம்

ரிஷபம் : உங்களின் நீண்ட நாள் எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம்.
Rasipalan Today3/12

மிதுனம்

மிதுனம் : பேச்சில் கவனமும் சாதுரியமும் தேவைப்படும் நாள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நலம் பயக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சுமாராகவே இருக்கும். மாலை நேரத்திற்குப் பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
Rasipalan Today4/12

கடகம்

கடகம் : திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி வெற்றிகரமாக முடியும். பழைய பாக்கிகள் வசூலாகும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் நற்செய்தி கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள்.
Rasipalan Today5/12

சிம்மம்

சிம்மம் : தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய முதலீடுகள் அல்லது சொத்து சேர்க்கை தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும்.
Rasipalan Today6/12

கன்னி

கன்னி ; வேலைச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் உங்களின் திறமையால் சமாளிப்பீர்கள். செலவுகளைக் கட்டுக்குள் வைக்க திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மன அமைதியைத் தரும்.
Rasipalan Today7/12

துலாம்

துலாம் : எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கைகொடுக்கும். குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
Rasipalan Today8/12

விருச்சிகம்

விருச்சிகம் : மனதில் புதிய உற்சாகமும் சுறுசுறுப்பும் பிறக்கும். அலுவலகப் பணிகளில் நிலுவையில் இருந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும். தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.
Rasipalan Today9/12

தனுசு

தனுசு : எந்தவொரு செயலிலும் கூடுதல் விழிப்புணர்வு தேவைப்படும் நாள். கடன் கொடுப்பது அல்லது வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. தந்தையாரின் ஆலோசனைகள் புதிய பாதையைக் காட்டும். மாலையில் மனக்கவலை நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
Rasipalan Today10/12

மகரம்

மகரம் : தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். கணவன்-மனைவிக்குள் இருந்த சிறு மனக்கசப்புகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
Rasipalan Today11/12

கும்பம்

கும்பம் : தடைகள் விலகி முன்னேற்றமான பாதை தென்படும். உத்தியோகத்தில் புதிய பதவி அல்லது இடமாற்றம் பற்றிய தகவல் வரலாம். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
Rasipalan Today12/12

மீனம்

மீனம் : குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய திட்டங்களைச் செயல்படுத்த உகந்த நாள்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழக அரசுப் பள்ளிகளில் 'திறன் ப்ளஸ்' மெகா திட்டம்: 2 முதல் 9 ஆம் வகுப்பு வரை அடிப்படைத் தேர்வு கட்டாயம்

தமிழக அரசுப் பள்ளிகளில் 'திறன் ப்ளஸ்' மெகா திட்டம்: 2 முதல் 9 ஆம் வகுப்பு வரை அடிப்படைத் தேர்வு கட்டாயம்

2

தமிழக கோயில்களில் புதிய விதிமுறை! ரூ.15 லட்சம் வரை ஏலம் நடத்த அறநிலையத்துறை அனுமதி

3

ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன்ஸி... மும்பை இந்தியன்ஸ் எடுத்த நல்ல முடிவு

4

ஆந்திராவில் CM விஜய்... சந்திரபாபு சொன்ன வார்த்தை... சென்னைக்கு வருது கிருஷ்ணா நதிநீர்

5

Explained : ‘ராம் லீலா’ மைதானத்திலும் போராட முடியாது! ஜந்தர் மந்தரை தொடர்ந்து புது இடத்துக்கும் சவால்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.