• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஆந்திராவில் CM விஜய்... சந்திரபாபு சொன்ன வார்த்தை... சென்னைக்கு வருது கிருஷ்ணா நதிநீர்

ஆந்திராவில் CM விஜய்... சந்திரபாபு சொன்ன வார்த்தை... சென்னைக்கு வருது கிருஷ்ணா நதிநீர்

CM Vijay Andhra Visit: ஆந்திராவுக்குச் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், சந்திரபாபு நாயுடு உடன் கிருஷ்ணா நதிநீர் பகிர்வு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் திறக்கப்படும் என ஆந்திர அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Written BySudharsan G
Published: Oct 13, 2026, 08:48 PM IST|Updated: Oct 13, 2026, 09:02 PM IST
joinshare
ஆந்திராவில் CM விஜய்... சந்திரபாபு சொன்ன வார்த்தை... சென்னைக்கு வருது கிருஷ்ணா நதிநீர்
Image Credit: TN CM Vijay, Andhra CM Chandrababu Naidu | Image Source : X/@ncbn

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன்ஸி... மும்பை இந்தியன்ஸ் எடுத்த நல்ல முடிவு

ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன்ஸி... மும்பை இந்தியன்ஸ் எடுத்த நல்ல முடிவு

2

ஆந்திராவில் CM விஜய்... சந்திரபாபு சொன்ன வார்த்தை... சென்னைக்கு வருது கிருஷ்ணா நதிநீர்

3

Explained : ‘ராம் லீலா’ மைதானத்திலும் போராட முடியாது! ஜந்தர் மந்தரை தொடர்ந்து புது இடத்துக்கும் சவால்..

4

தவெக ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம்... CM விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின் - என்ன மேட்டர்?

5

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா... பிரதமர் மோடிக்கு கடிதம் - திடீர் அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

CM Vijay Andhra Visit: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று ஆந்திராவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கன்னாவரம் விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய், விஜயவாடாவில் உள்ள ஸ்ரீகனகதுர்கை கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

தொடர்ந்து கோதவரி - காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் நாரா லோகேஷ் உள்ளிட்டோரை முதலைமைச்சர் விஜய் சந்தித்தார். ஆந்திர பயணத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முதலமைச்சர் உடன் சென்றனர்.

மேலும் படிக்க | ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.37... தவெக அரசு ஏன் இவ்வளவு விலை கொடுக்கிறது? Explained

ஒரே மேடையில் 2 முதல்வர்கள்

இந்நிலையில், விஜயவாடாவில் நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விஜயவாடா உற்சவம் 2.0 நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த விழாவில் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் விஜய் ஒரே மேடையில் தோன்றினார்.

தெலுங்கில் உரையாற்றி CM விஜய்

விழா மேடையில் தெலுங்கில் வணக்கம் சொல்லி முதலமைச்சர் விஜய் பேசத் தொடங்கினார். தொடர்ந்து, தனக்கு அழைப்பு விடுத்ததற்கு சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றி சொன்ன முதலமைச்சர் விஜய், விஜய்வாடா தனக்கு அளித்த விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்தார். இவை அனைத்தையும் அவர் தெலுங்கில் பேசியது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் நதிநீர் பகிர்வு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 'என் நெஞ்சில் குடியிருக்கும்...' என்று தமிழில் கூறி விஜயவாடா மக்களுக்கு தனது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | மெட்ரோ ரயில் பயணத்தின் போது..பிரதமர் மோடி பேசியது என்ன? வெளியான தகவல்!

முன்னதாக மேடையில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, "நீர் பற்றாக்குறை இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை வழங்குவோம். நடப்பாண்டில் சென்னைக்கு இதுவரை 4.08 டிஎம்சி நீர் வழங்கப்பட்டுள்ளது. நீர் விவகாரத்தில் Conflict வேண்டாம்; Cooperation மட்டுமே தேவை என கிருஷ்ணா நதிநீர் விவகாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்தார்.

சென்னைக்கு 3 டிஎம்சி கிருஷ்ணா நீர்

தற்போது முதலமைச்சர் விஜய் ஆந்திராவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்த வேளையில், கிருஷ்ணா நதிநீரில் சென்னைக்கு அடுத்த இரண்டு மாதங்களில் 3 டிஎம்சி நீரை வழங்குவதற்கு ஆந்திர அரசு முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆகியோரின் பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க | தவெக ஆட்சியில் தமிழ்நாடு முதலிடம்... CM விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின் - என்ன மேட்டர்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy