• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி! ரேஷன் கடைகளில் வரப்போகும் மாற்றம்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி! ரேஷன் கடைகளில் வரப்போகும் மாற்றம்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 09, 2026, 04:24 PM IST|Updated: Nov 09, 2026, 04:29 PM IST
joinshare
Ration Card Alert : 10 ஆயிரம் ரேஷன் கடைகளில் UPI சவுண்ட் பாக்ஸ் வைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. முழு விவரம்

Ration Card Alert : 10 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் யுபிஐ சவுண்ட் பாக்ஸ் வைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

ration card latest update1/6

10,000 ரேஷன் கடைகளில் புதிய டிஜிட்டல் வசதி

10,000 ரேஷன் கடைகளில் புதிய டிஜிட்டல் வசதி - தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் பொது விநியோகத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், 38 மாவட்டங்களில் உள்ள 10 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் UPI Sound Box கருவிகளைப் பொருத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் கடைகளில் 5 ஆண்டுகாலப் பயன்பாட்டிற்காக இக்கருவிகள் நிறுவப்பட உள்ளன.
ration card latest update2/6

பல கோடி ரூபாய் மதிப்பிலான மெகா திட்டம்

பல கோடி ரூபாய் மதிப்பிலான மெகா திட்டம் - 10 ஆயிரம் சாதனங்கள், 5 ஆண்டுகளுக்கான சிம் கார்டு இணைப்பு, சர்வர் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி இதற்கான டெண்டரைத் தொடங்கியுள்ளது. ஒரு கருவியின் தோராய மதிப்பு ரூ.1,500 முதல் ரூ.2,000 என கணக்கிடப்பட்டாலும், நீண்டகாலப் பராமரிப்புடன் சேர்த்து இத்திட்டம் பல கோடி ரூபாய் மதிப்பிலானதாக அமைகிறது.
ration card latest update3/6

சில்லறை தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வு

சில்லறை தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வு - கிராமப்புற மற்றும் நகர்ப்புற ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும்போது ஏற்படும் மிகப்பெரிய சிக்கலான சில்லறை தட்டுப்பாட்டுக்கு இதன் மூலம் தீர்வு காணப்படுகிறது. பொதுமக்கள் இனி ரொக்கப் பணத்திற்குப் பதிலாக கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட தங்களின் விருப்பமான யூ.பி.ஐ செயலிகள் மூலம் எளிய முறையில் விரைவாகப் பணத்தைச் செலுத்த முடியும்.
ration card latest update4/6

கூடுதல் வசூல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி

கூடுதல் வசூல் புகார்களுக்கு முற்றுப்புள்ளி - பணம் செலுத்தியவுடன் "பணம் பெறப்பட்டது" என்ற குரல் ஒலி சவுண்ட் பாக்ஸ் மூலம் உடனடியாக வெளிவருவதால், விற்பனையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். பொருட்களுக்கு அரசு நிர்ணயித்த விலையைத் தாண்டி கூடுதல் பணம் வசூலிப்பது, கையில் பணத்தைக் கையாளுவதில் ஏற்படும் குழப்பங்கள் போன்ற முறைகேடுகள் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும்.
ration card latest update5/6

வங்கிக் கணக்குகளில் நேரடிப் பதிவு

வங்கிக் கணக்குகளில் நேரடிப் பதிவு - ரேஷன் கடைகளில் நடக்கும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையும் உடனடியாகக் கூட்டுறவு வங்கிகளின் மைய சர்வரில் தானாகவே பதிவாகிவிடும். இதனால் நாளின் இறுதியில் கணக்கு சரிபார்ப்பது எளிதாவதுடன், ரொக்கப் பணம் கையாடல் செய்யப்படுவது அல்லது கணக்கில் வராமல் போவது போன்ற நிதி சார்ந்த தவறுகள் முழுமையாகத் தவிர்க்கப்படும்.
ration card latest update6/6

அனைத்து கடைகளுக்கும் விரிவாக்க திட்டம்

அனைத்து கடைகளுக்கும் விரிவாக்க திட்டம் - மாநிலம் முழுவதும் சுமார் 34,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வரும் சூழலில், முதல்கட்டமாக 10,000 கடைகளில் முன்னோடித் திட்டமாக இந்த சவுண்ட் பாக்ஸ் வசதி கொண்டுவரப்படுகிறது. பொதுமக்களின் வரவேற்பு மற்றும் செயல்பாட்டுத் திறனைப் பொறுத்து, படிப்படியாகத் தமிழகத்தின் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TAGS:
Ration Card

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.