Ration Card latest Update : ரேஷன் கார்டு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஆதார் இல்லாமல் யார் பெயர் சேர்க்கலாம்? முக்கிய அப்டேட்
Ration Card latest Update : ஆதார் கார்டு இல்லாமலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கலாம். அது யாருக்கு பொருந்தும் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/6
ஆன்லைன் விண்ணப்பம் :
ஆன்லைன் விண்ணப்பம் : புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை (Smart Family Card) கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) 04.07.2024 அன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் நியாயவிலைக் கடை குறியீடுகளைப் பெறுவதற்காக அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.
2/6
TNeGA ஆய்வு, கள விசாரணை :
TNeGA ஆய்வு, கள விசாரணை : மாவட்டங்களிலிருந்து பெறப்படும் நியாயவிலைக் கடை குறியீடுகள் அடங்கிய விண்ணப்பப் பட்டியல், ஆய்வுக்காக 15 நாட்களுக்கு ஒருமுறை தமிழ்நாடு மின்-ஆளுமை முகமைக்கு (TNeGA) அனுப்பப்படும். TNeGA-வின் பகுப்பாய்வு அறிக்கைக்குப் பிறகு, விண்ணப்பதாரர்களின் விவரங்களை உறுதி செய்ய மீண்டும் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு கள விசாரணை (Field Verification) நடத்தப்படும்.
3/6
QR குறியீடு கொண்ட ஸ்மார்ட் கார்டு :
QR குறியீடு கொண்ட ஸ்மார்ட் கார்டு : கள விசாரணையில் தகுதியானவர்கள் என உறுதி செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, விரைவுத் துலங்கல் குறியீடு (QR Code) பொறிக்கப்பட்ட புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பயனாளிகள் நியாயவிலைக் கடைகளில் நிறுவப்பட்டுள்ள விற்பனை முனையக் கருவிகள் (PoS) வழியாக அத்தியாவசியப் பொருட்களை எளிதாகப் பெற முடியும்.
4/6
73,163 புதிய கார்டுகள் விநியோகம்
73,163 புதிய கார்டுகள் விநியோகம் : 2022-ஆம் ஆண்டு முதல் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் மாவட்டத் தலைமையகங்களிலேயே அச்சிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 11.05.2026 முதல் 31.07.2026 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 73,163 புதிய குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
5/6
போலி கார்டுகளுக்கு முற்றுப்புள்ளி :
போலி கார்டுகளுக்கு முற்றுப்புள்ளி : ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படும்போதே ஒவ்வொரு பயனாளியின் ஆதார் எண்ணும் பதிவு செய்யப்படுகிறது. இதனால் போலி மற்றும் இரட்டை குடும்ப அட்டைகள் உருவாவதற்கான வாய்ப்பு முழுமையாகத் தடுக்கப்பட்டு, பொது விநியோகத் திட்டத்தின் (PDS) வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
6/6
ஆதார் பயோமெட்ரிக் விலக்கு யாருக்கு?
ஆதார் பயோமெட்ரிக் விலக்கு யாருக்கு? : ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் ஆதாரத்துடனும், ஆதார் பதிவு செய்ய இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு இன்றி குடும்ப அட்டையில் பயனாளிகளாகச் சேர்க்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.