• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /அனிருத்-காவ்யா திருமண புகைப்படங்கள்..AI போட்டோஸ் போல இருப்பது ஏன்? காரணம் இதுதான்!

அனிருத்-காவ்யா திருமண புகைப்படங்கள்..AI போட்டோஸ் போல இருப்பது ஏன்? காரணம் இதுதான்!

Written ByYuvashree M
Published: Nov 12, 2026, 10:01 AM IST|Updated: Nov 12, 2026, 10:32 AM IST
joinshare
Anirudh Kavya Wedding Photos : தமிழ் திரையுலகின் இசையுலக ராக்ஸ்டார் ஆக வலம் வரும் அனிருத்திற்கும், இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான காவ்யா மாறனுக்கும் கிரீஸில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த போட்டோஸை பார்த்தவர்கள் இவை AI போல இருப்பதாக குறிப்பிடுகின்றனர். இது குறித்த தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Anirudh Kavya Wedding Photos : தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அனிருத்-காவ்யா மாறனின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த திருமணத்தில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிலையில், இவர்கள் திருமண புகைப்படங்கள் பார்க்க AI போல இருப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Anirudh Kavya Maran Wedding1/5

அனிருத் காவ்யா மாறன்

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் அனிருத்திற்கும் பிரபல தொழிலதிபரான காவ்யா மாறனுக்கும் கிரீஸில் திருமணம் நடைப்பெற்றது. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிரீஸில் நடந்த இவர்களின் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
kavya anirudh greece wedding2/5

காவ்யா மாறன் கிரீஸ் திருமணம்

காவ்யா மாறன் - அனிருத் திருமணத்தின் மூலம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், நடிகர் ரஜினிகாந்தும் உறவினர்கள் ஆகியிருக்கின்றனர். இவர்கள் இருவரும்தான் கிரீஸில் நடந்த இவர்கள் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்ததாக கூறப்படுகிறது.
Looks Like AI photos3/5

ஏஐ போன்ற புகைப்படங்கள்

அனிருத் - காவ்யா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதைப்பார்த்த பலர், இது பார்ப்பதற்கு AI புகைப்படங்கள் போல இருப்பதாக பலரும் பேசி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் பார்க்க ஏன் நிஜம் அல்லாமல் AI Generated போல இருக்கிறது தெரியுமா?
Here is The Reason Why4/5

இதுதான் காரணம்

அனிருத்-காவ்யாவின் திருமணத்தில் அவர்களின் ஆடை நிறமும், அவர்கள் திருமணம் செய்து கொண்ட மேடையின் பின்னணியும் ஒரே கலரில் இருந்தது. அதாவது இவை அனைத்தும் Pastel நிறத்தில் அதாவது Soft நிறத்தில் இருந்தன. எனவே, இது AI போட்டோக்களில் இருப்பது போல இருந்தது.
Why Does It Look Like AI5/5

AI போன்று இருப்பது ஏன்

அனிருத்-காவ்யா திருமணத்தை போட்டோ எடுத்தவரும், யார் முகத்திலும் இருக்கும் சுருக்கங்கள் கூட தெரியாத அளவிற்கு போட்டோ எடுத்துள்ளார். மேலும், இந்த திருமணத்திற்கு கலை வடிவம் செய்திருப்பவர்கள், AI moodboardல் இருந்து, அதாவது AI இடம் ஐடியா கேட்டு இதனை டிசைன் செய்தது போல உள்ளது. இதனால், இந்த திருமணத்தில் மணமக்களின் பர்சனல் டச் என்ற ஒன்று விட்டுப்போய் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.