• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா? நவம்பர் 17ல் வெளியாகும் அறிவிப்பு!

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா? நவம்பர் 17ல் வெளியாகும் அறிவிப்பு!

Written ByR Balaji
Published: Nov 07, 2026, 09:28 PM IST|Updated: Nov 07, 2026, 09:30 PM IST
joinshare

Rohit Sharma Mumbai Indians Latest News: ஐபிஎல் 2027 தொடருக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் நியமிக்கப்படலாம் என்றும், நவம்பர் 17ல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

IPL1/5

மும்பை அணியின் கேப்டனாக மீண்டும் ரோகித் சர்மா?

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணிக்கு டிரேட் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
IPL2/5

6 சீசன்களாக கோப்பையை வெல்லாத மும்பை!

2020 ஐபிஎல் தொடருக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. பல வீரர்களை மாற்றியும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. இதனால் அணியின் பயிற்சியாளர் குழுவிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
IPL3/5

புதிய பயிற்சியாளர் குழு.. வீரர்கள் டிரேட்!

மும்பை அணியின் பயிற்சியாளர் குழுவில் பொல்லார்ட் தலைமையில் ராபின் உத்தப்பா, மெக்லனகன், தவால் குல்கர்னி, திலீப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஹர்திக் பாண்டியா டிரேட் ஒப்பந்தமும் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அர்ஷ்தீப் சிங், விஷ்ணு வினோத் ஆகியோர் மும்பை அணிக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
IPL4/5

ரோகித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு?

மும்பை அணியின் அடுத்த கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்படுவாரா அல்லது ரோகித் சர்மா மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்கிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்த சீசனில் ரோகித் சர்மா 40 வயதை எட்ட உள்ளதால், அவரது தலைமையில் அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
IPL5/5

நவம்பர் 17ல் அறிவிப்பு?

நவம்பர் 16 முதல் 18ம் தேதிக்குள் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நவம்பர் 17ம் தேதி வீரர்கள் தக்கவைப்பு பட்டியல் வெளியிடப்படும் போது இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரோகித் சர்மாவின் அடுத்த சீசன் கடைசி சீசனாக இருக்கலாம் என்றும், கோப்பையை வென்று புதிய கேப்டனிடம் பொறுப்பை ஒப்படைக்க மும்பை அணி திட்டமிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
TAGS:
IPL

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!

அடியாத்தி.. ரூ. 1 லட்சம் தீபாவளி போனஸா? ஊழியர்களை உறைய வைத்த ஜவுளிக்கடை ஓனர்!

2

டெல்லியில் ரூ.15 கோடி சொகுசு வீடுகள் ஏலம் ரத்து.. NBCC நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

3

CM Vijay Diwali Wish: “பாதுகாப்பாக கொண்டாடுங்கள்”.. தீபாவளி வாழ்த்து கூறிய முதல்வர் விஜய்!

4

சூரிய நட்சத்திர பெயர்ச்சி.. நவம்பர் 20 வரை இந்த 3 ராசிகளுக்கு பணமழை, ராஜயோகம்!

5

கோவை பெரியார் அறிவுலக சர்ச்சை.. அகல்விளக்கு பதிப்பாளர் மோகன் விளக்கம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.