• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ஒரே ஓவரில் 7 சிக்ஸ் அடித்து வரலாறு படைத்த சிஎஸ்கே பிளேயர்! யார் தெரியுமா?

ஒரே ஓவரில் 7 சிக்ஸ் அடித்து வரலாறு படைத்த சிஎஸ்கே பிளேயர்! யார் தெரியுமா?

Written ByKarthikeyan Sekar
Published: Aug 09, 2026, 14:33 IST|Updated: Aug 09, 2026, 14:50 IST
joinshare
Ruturaj Gaikwad: ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து, ருதுராஜ் கெய்க்வாட் படைத்த சாதனை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Ruturaj Gaikwad: இந்திய கிரிக்கெட் பிளேயரும், ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுபவருமான ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்தது எப்படி? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்
 

Ruthuraj gaikwad News1/7

ருதுராஜ் கெய்க்வாட்

இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசி கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் செய்யாத உலக சாதனையைப் படைத்துள்ளார்.
Gaikward records2/7

ருதுராஜ் கெய்க்வாட் சாதனை

நவம்பர் 28, 2022 அன்று நடந்த விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிப் போட்டியில், மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய கெய்க்வாட், உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக இந்த அதிரடியைக் காட்டினார்.
Cricket Records3/7

7 பந்துகளை சந்தித்த ருதுராஜ்

சுழற்பந்து வீச்சாளர் சிவா சிங் வீசிய அந்த ஓவரில் ஒரு பந்து 'நோ-பால்' ஆக வீசப்பட்டதால், கெய்க்வாட்டிற்கு 7 பந்துகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ruthuraj gaikwad latest news4/7

ருதுராஜ் கெய்க்வாட் விளாசல்

தனக்குக் கிடைத்த 7 பந்துகளையும் மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட ருதுராஜ் கெய்க்வாட், ஒரே ஓவரில் 43 ரன்கள் குவித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புதிய சாதனையைப் பதிவு செய்தார்.
ruthuraj gaikwad sixers5/7

ருதுராஜ் கெய்க்வாட் 16 சிக்சர்கள்

இந்த இன்னிங்ஸில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 159 பந்துகளில் 220 ரன்கள் குவித்த கெய்க்வாட், தன் இன்னிங்ஸில் மொத்தம் 10 பவுண்டரிகளையும் 16 சிக்ஸர்களையும் விளாசினார்.
indian cricket team6/7

இந்திய அணி

இந்திய தேசிய அணிக்காக இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 ரன்களும் மற்றும் 23 டி20 போட்டிகளில் 633 ரன்களும் எடுத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.
chennai super kings7/7

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டனாகச் செயல்படும் இவர், 71 போட்டிகளில் 48.8 சராசரியுடன் 2 சதங்கள் மற்றும் 20 அரைசதங்கள் உள்ளடங்கலாக 2,502 ரன்கள் குவித்து முக்கிய தொடக்க ஆட்டக்காரராகத் திகழ்கிறார்.
TAGS:
Cricket

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.