ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. அரைசதம் அடித்து சஞ்சு சாம்சன் அடித்து மிரட்டினார்.
ஆப்கானிஸ்தான் - இந்தியா அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் நடைபெறுகிறது. தற்போது இரண்டு டி20ஐ போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றிருக்கிறது. கடைசி மற்றும் 3வது டி20ஐ போட்டி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
1/6
பிளேயிங் லெவனில் ரவி பிஷ்னோய்
ஆப்கானிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20ஐ போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது. வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதை தொடர்ந்து, ரவி பிஷ்னோய் பிளேயிங் 11-ல் சேர்க்கப்பட்டார். (Image Source : X/@BCCI)
2/6
ஆப்கானிஸ்தான் நிதான ஓபனிங்
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் ஓபனர் ரஹ்மானுல்லா குர்பாஸ் டக்அவுட்டாகி வெளியேறினார். பவர்பிளேவில் இப்ராஹிம் சத்ரான் பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதனால், பவர்பிளேவில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை எடுத்தது. (Image Source : X/@BCCI)
3/6
இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு
மிடில் ஓவர்களில் நிதிஷ் குமார் சிறப்பாக பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை சரித்தார். சத்ரான் 37 ரன்களிலும், குல்புதின் நைப் 10 ரன்களிலும் நிதிஷ் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் செதிக்குலா அடல் 12 ரன்களில் ரவி பிஷ்னோயிடம் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் பேட்டிங்கில் மிரட்டிய ஓமர்ஸாய் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. (Image Source : X/@BCCI)
4/6
இந்திய அணிக்கு மிரட்டலான ஓபனிங்
நிதிஷ் குமார் ரெட்டி 3 விக்கெட்டையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டையும்; பும்ரா, அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 160 ரன்களை துரத்திய இந்திய அணி ஓபனிங் சிறப்பாக அமைந்தது. இந்த போட்டியிலும் பவர்பிளேவில் 82 ரன்களை குவித்து மிரட்டியது இந்திய அணி. ஆனால் இன்றைய போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடியை சஞ்சு சாம்சன் மிஞ்சிவிட்டார். இந்திய அணியில் சஞ்சுவின் இடத்திற்கு இனி பெரியளவில் ஆபத்திருக்காது. (Image Source : X/@BCCI)
5/6
சஞ்சு சாம்சனின் மிரட்டலான ஆட்டம்
அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 39 ரன்களை எடுத்து (ஸ்ட்ரைக் ரேட் 205.26) 7வது ஓவரில் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 57 ரன்களை எடுத்து (ஸ்ட்ரைக் ரேட் 259.09) 7வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த 3 விக்கெட்டையும் ரஷித் கான் வீழ்த்தினார். (Image Source : X/@BCCI)
6/6
ஆட்ட நாயகன் விருதை வென்ற நிதிஷ் குமார் ரெட்டி
இருப்பினும் இஷான் கிஷன் அதிரடியில் இந்திய அணி 14.5 ஓவரிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. 2-0 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது. இஷான் கிஷன் 38 ரன்களுடனும், திலக் வர்மா 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்ததனர். 3 விக்கெட் வீழ்த்திய நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றார். (Image Source : X/@BCCI)