• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சனி நட்சத்திர பெயர்ச்சி: 3 நாட்களில் 5 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

சனி நட்சத்திர பெயர்ச்சி: 3 நாட்களில் 5 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

Written BySripriya Sambathkumar
Published: Oct 06, 2026, 02:46 PM IST|Updated: Oct 06, 2026, 02:53 PM IST
joinshare
Sani Nakshatra Peyarchi: இன்னும் 3 நாட்களில் சனி நட்சத்திர பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கத்தால் 5 ராசிகளின் வாழ்வில் பொற்காலம் பிறக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கபடுகிறார். அவரது ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி நட்சத்திர பெயர்ச்சியால் தலைவிதியே மாறப்போகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Sani Nakshatra Peyarchi1/9

சனி நட்சத்திர பெயர்ச்சி

இன்னும் 3 நாட்களில், அதாவது அக்டோபர் 9ஆம் தேதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்திலிருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இது முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி பெயர்ச்சி பலன்கள்2/9

Sani Peyarchi Palangal

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இது பல வித நன்மைகளை அளிக்கும். இந்த காலத்தில் நிதி நன்மைகள் கிடைப்பதோடு பல வித நற்செய்திகளும் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Taurus3/9

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு பல நல்ல செய்திகள் கிடைக்கும். சனி பெயர்ச்சி காலத்தில் சனி பகவானின் அருளால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.
Gemini4/9

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கத்தால் தொழில் முன்னேற்றத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பெறுவார்கள். நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம்.
Virgo5/9

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திரப் பெயர்ச்சி தடைபட்ட பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய உதவும். வாழ்வில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மன அழுத்தம் விலகி, அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நீங்கள் நிதி ஆதாயங்களையும் பெறலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
Libra6/9

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி சாதகமான நன்மைகளை அளிக்கும். தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் லாபகரமானதாக இருக்கும். பணியில் வெற்றி கிடைக்கும், கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். குழந்தைகள் மூலம் வெற்றி கிடைக்கும். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். நிலுவையில் உள்ள பணம் அல்லது உங்களுக்கு வர வேண்டிய தொகை திரும்பக் கிடைக்கலாம்.
Capricorn7/9

மகரம்

சனி பகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவது மகர ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன. நிதி நிலை வலுவடையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
Lord Shani Blessings8/9

சனி பகவானின் அருள் பெற

சனி பகவானின் அருள் பெற, 'ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்' என்ற சனி காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயனம் செய்யலாம். இது தவிர தினமும் சனி சாலிசா படிப்பதும் நன்மை தரும்.
Disclaimer9/9

பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி: தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி: தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

2

பாஸ்போர்ட் அப்டேட்! பெயர் மாற்ற புதிய ரூல்ஸ் அறிமுகம் - முழு விவரம் Explained

3

ரூ.45000 பணத்திற்காக..கூலி தொழிலாளியை குத்தி கொன்ற வடமாநில இளைஞர்! பகீர் சம்பவம்..

4

தமிழகத்தில் நாளை மின்தடை: கோவை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மின் விநியோகம் தடை-முழு பட்டியல்

5

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு சூப்பர் செய்தி: அகவிலைப்படி 447% அதிரடி உயர்வு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.