• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தீவிரமாகும் அர்னாப் புயல்! பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.. புதுச்சேரி அரசு அறிவிப்பு

தீவிரமாகும் அர்னாப் புயல்! பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.. புதுச்சேரி அரசு அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Oct 26, 2026, 05:18 PM IST|Updated: Oct 26, 2026, 05:24 PM IST
joinshare
Arnab Cyclone School Holidays: 'அர்னாப்’ புயல் காரணமாக புதுச்சேரியின் நிர்வாகப் பகுதியான ஆந்திரா அருகே உள்ள யானம் பிராந்தியத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27,28ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Arnab Cyclone School Holidays: வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் அக்டோபர் 28-ஆம் தேதி ஆந்திரப் பிரதேசக் கரையை கடந்துசெல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Arnab Cyclone1/5

வங்கக்கடலில் அர்னாப் புயல் உருவானது

மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது. இது மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை (26.10.2026) 05.30 மணி அளவில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக (அர்னாப்) வலுப்பெற்றது.
Arnab Cyclone2/5

மிக தீவிர புயலாக மாறும் அர்னாப்

அர்னாப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவுக்குள் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும், நாளை (27-10-26) மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் (Yanam) கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா (Bapatla) மற்றும் விசாகப்பட்டினம் (Visakhapatnam) இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Arnab Cyclone3/5

பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை

இதனால், புதுச்சேரி, ஆந்திர பகுதிகளில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது முதலே புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Arnab Cyclone4/5

யானம் பிராந்தியத்தில் விடுமுறை அறிவிப்பு

'அர்னாப்’ புயல் காரணமாக புதுச்சேரியின் நிர்வாகப் பகுதியான ஆந்திரா அருகே உள்ள யானம் பிராந்தியத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 27), நாளை மறுநாள் (அக்டோபர் 28) இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Arnab Cyclone5/5

அர்னாப் புயல் காரணமாக கனமழை அலர்ட்

அர்னாப் புயல் காரணமாக, தமிழகத்தில் நாளை (அக்டோபர் 27) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
TAGS:
Weather

Trending

  • News
  • Photos
  • Videos
சிஎஸ்கே அணியின் புதிய பேட்டிங் கோச்... யார் இந்த கேரத் பேட்டி...?

சிஎஸ்கே அணியின் புதிய பேட்டிங் கோச்... யார் இந்த கேரத் பேட்டி...?

2

தர்மன் படத்தில் நயன்தாரா! 5வது முறை ரஜினியுடன் கூட்டணி..கன்ஃபார்ம் ஹிட்தான்!

3

Explained : சென்சார் போர்டில் இருந்து..ரிலீஸ் ஆகாத 500 படங்களின் தரவுகள் லீக்! என்ன நடந்தது?

4

ஜாமியாவில் என்ன நடக்கிறது? தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் வெடித்த புதிய போராட்டம்

5

அன்பில் மகேஷ் கைது... ரூ.100 கோடி லஞ்ச வழக்கில் போலீசார் அதிரடி

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.