தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார், ரவி மோகன். இவர், தன்னுடைய தோழி கெனிஷா தன்னை விட்டு பிரிந்ததாக பேசிய நிலையில், தற்போது அவருடன் இணைந்து ஒரு படத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரவி மோகன், An Ordinary Man எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில், கெனிஷாவும் இணைந்து பணியாற்றி வருகிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
கெனிஷா-ரவி மோகன்
சில மாதங்களுக்கு முன்பு, கெனிஷா-ரவி மோகன் இருவருடைய உறவு குறித்துதான் கோலிவுட் முழுவதும் பேச்சாக இருந்தது. இன்னும் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வாங்காத நிலையில், கெனிஷாவுடனான உறவை அவர் வளர்த்துக்கொண்டது, பலர் மத்தியில் பெரும் பேச்சாக இருந்தது.
2/5
பிரஸ் மீட்
நடிகர் ரவி மோகன், சில மாதங்களுக்கு முன்பாக பரபரப்பான பிரஸ் மீட் ஒன்றை கொடுத்தார். அதில், கெனிஷா தன்னை விட்டு பிரிந்து விட்டதாகவும், தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்தார். இவர் இப்படி பேசியது, பலருக்கும் கவலையை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு, தான் அதிலிருந்து மீண்டு வந்து சினிமாவில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.
3/5
கெனிஷா
கெனிஷாவும், தன் மீது பலரும் வெறுப்பை உமிழ்வதாக கூறி, சமூக வலதளங்களில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். அதன் பிறகு சைலண்டாக இருந்த இவர், தற்போது ரவி மோகனுடன் மீண்டும் இணைந்திருக்கும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
4/5
An Ordinary Man
ரவி மோகன், யோகி பாபுவை ஹீரோவாக நடிக்க வைக்கும் திரைப்படம்தான், An Ordinary Man. இந்த படத்தை ரவி மோகனே இயக்கியும் இருக்கிறார். இந்த படத்திற்கு, கெனிஷாதான் இசையமைக்கிறார்.
5/5
அறிவிப்பு
கெனிஷா, An Ordinary Man திரைப்படத்திற்கு இசையமைப்பது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.