Southern Railway: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் 7 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இதற்கு ஏற்ப, பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Southern Railway: சென்னையில் இருந்து எந்தெந்த ரயில்கள் தாமதமாக புறப்படுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
1/5
சென்னை எழும்பூர்
சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. வெளி மாவட்டங்கள் செல்வதற்கு பலரும் ரயிலக்ளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான விரைவு ரயில்கள் இயக்கப்ட்டு வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கும்.
2/5
தெற்கு ரயில்வே
அவ்வப்போது தெற்கு ரயில்வே ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னையில் இருந்து செல்லும் தென் மாவட்ட ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பேரணி யார்டில் (சென்னை எழும்பூர் - விழுப்புரம்) பொறியியல் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் 6ஆம் தேதி வரை இவ்வழித்தடத்தில் 7 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/5
திருநெல்வேலி ரயில்
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் ரயில் எண் 20665 வந்தே பாரத் ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். மேலும், எழும்பூர் - மதுரை ரயில் எண் 12635 செப்டம்பர் 5ஆம் தேதி 1 மணி நேரம் 50 நிமிடங்கள் தாமதமாகவே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
4/5
புதுச்சேரி ரயில்
மேலும், புதுச்சேரி - காச்சிகுடே ரயில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதாக இயக்கப்படும். ரயில் எண் 16112 புதுச்சேரி - திருப்பதி ரயில் செப்டம்பர் 6ஆம் தேதி 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். ரயில் எண் 06059 தாம்பரம் - போடிநாயக்கனூர் ரயில் செப்டம்பர் 6ஆம் தேதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
5/5
பயணிகளுக்கு அறிவுறுத்தல்
எனவே, இதற்கு ஏற்ப பயணிகள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். சென்னை எழும்பூரில் இருந்து நாளை வரை விரைவு ரயில்கள் தாமதமாகவே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெளிவுப்படுத்தியுள்ளது.