Chennai Arakonam AC EMU service: சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் சேவை அக்டோபர் 23ஆம் தேதி முதல் துவங்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து முழுமையாக பார்ப்போம்.
Chennai Arakonam AC EMU service: அரக்கோணம் வழித்தடத்தில் டிசம்பர் 24ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1/5
சென்னையின் முக்கிய போக்குவரத்து மின்சார ரயில்
சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில் சேவை. மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - சூளுர்பேட்டை, கடற்கரை - வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. குறைந்த கட்டணம், விரைவாக செல்வதால், கல்லூரிகள் மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் என பலரும் பயணித்து வருகின்றனர்.
2/5
சென்னையில் ஏசி மின்சார ரயில்
இதற்கிடையில், தெற்கு ரயில்வே செங்கல்பட்டு - தாம்பரம் வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 2025 ஏப்ரல் மாதம் இவ்வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் சேவை தெற்கு ரயில்வே தொடங்கியது. ஏசி மின்சார ரயில் கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.25 தெற்கு ரயில்வே வசூலித்து வருகிறது. ஆனால், பெரிய அளவில் மக்கள் மத்தியில் இது வரவேற்பை பெறவில்லை.
3/5
அக்டோபர் 23 முதல் அரக்கோணம் வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில்
இந்த நிலையில், சென்னை- அரக்கோணம் வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே திட்டமிட்டது. அதற்கான பணிகளை தொடங்கியது. இந்த நிலையில், தெற்கு ரயில்வே அரக்கோணம் வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் சேவை குறித்து முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, அரக்கோணம் வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் சேவை அக்டோபர் 23ஆம் தேதி முதல் துவங்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
4/5
அரக்கோணம் ஏசி மின்சார ரயில் எங்கெல்லாம் நிற்கும்?
12 பெட்டிகள் கொண்ட ஏசி மின்சார ரயில் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் அக்டோபர் 23 முதல் டிசம்பர் 24ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் திருவள்ளூர், ஆவடி, திருநின்றவூர், அம்பத்தூர் வழியாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த குறைந்த நிறுத்தங்களுடன் நின்று செல்லும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
5/5
விரைவில் நேர அட்டவணை வெளியாகும்
சென்ட்ரலில் இருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள அரக்கோணம் செல்ல சாதாரண மின்சார ரயிலில் 3 மணி நேரமாகும். அதுவே ஏசி மின்சார ரயிலில் 2 மணி நேரத்தில் சென்றடையலாம். இந்த ரயிலில் 90 கி.மீ வேகத்தில் செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த ரயில் அக்டோபர் 23 முதல் தொடங்கப்பட உள்ள நிலையில், விரைவில் நேர அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.