• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /கோவை பயணிகளே அலர்ட்! விரைவு ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோவை பயணிகளே அலர்ட்! விரைவு ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Oct 23, 2026, 04:21 PM IST|Updated: Oct 23, 2026, 04:27 PM IST
joinshare
Coimabatore Train Service Changes: கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஈரோடு - கரூர் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Coimabatore Train Service Changes:  எனவே, பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Coimbatore Train1/5

கோவை ரயில் சேவையில் மாற்றம்

தமிழகத்தில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இதனால் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், தெற்கு ரயில்வே அவ்வப்போது ரயில் போக்குவரத்தில சில மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் சில ரயில்களில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Coimbatore Train2/5

அக்டோபர் 24ஆம் தேதி முதல் ரயில் சேவையில் மாற்றம்

அதன்படி, ஈரோடு - கரூர் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கோவை வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 24ஆம் தேதிமுதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை கோவை வழியாக செல்லும் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Coimbatore Train3/5

பாலக்காடு - புகழுர் ரயில் சேவையில் மாற்றம்

அதன்படி, பாலக்காட்டில் இருந்து அக்டோபர் 24,27,29,31ஆம் தேதிகளில் இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்.16844) பாலக்காடு - புகழுர் இடையே மட்டும் இயக்கப்படும். இதனால், அக்டோபர் 24,27,29,31ஆம் தேதிகளில் புகழுர் - திருச்சி இடையே மட்டும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Coimbatore Train4/5

கோவை - நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்

கோவையில் இருந்து அக்டோபர் 24,27,29,31ஆம் தேதிகளில் காலை 8 மணிக்கு புறப்படும் கோவை - நாகர்கோவில் (எண்: 16322) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Coimbatore Train5/5

எந்த ரயில் நிலையங்களில் நிற்காது?

இதனால், கோவை - நாகர்கோவில் ரயில் வடகோவை, பீளமேடு, ஈசூராடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர், சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், பசூர், கொடுமுடி, புகழுர், கரூர், பாளையம், எரியோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லாது. எனவே, இதற்கு ஏற்ப பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
TAGS:
Southern Railway

Trending

  • News
  • Photos
  • Videos
TNPSC குரூப் 4 தேர்வு.. இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு.. எப்படி கலந்து கொள்ளலாம்?

TNPSC குரூப் 4 தேர்வு.. இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு.. எப்படி கலந்து கொள்ளலாம்?

2

சோகத்தில் CSK வீரர்கள்... ஆயுஷ் மாத்ரேவுக்கு ஆபரேஷன் - ஐபிஎல் விளையாடுவாரா?

3

சனியின் ராசியில் சந்திரன் பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. கோடீஸ்வர யோகம்!

4

இ-டெண்டர் புதிய அப்டேட்! அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்

5

தமிழக அரசு தரும் கூடுதல் மானியம்... சோலார் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? நன்மைகள் என்ன? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.