Polio Drop Camp Tamil Nadu: தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஏற்கனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முதல் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்க வேண்டும்.
Polio Drop Camp Tamil Nadu: நாளை (நவம்பர் 22) எந்தெந்த மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
1/5
நாளை 6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
போலியோ சொட்டு மருந்து முகாம் 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர். திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. மேற்காணும் 6 மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 6,647 மையங்களில் நடைபெறும்.
முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வாழும்பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 320 அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.
3/5
9.16 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு
இம்மையங்களில் 9.16 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன என தமிழகு அரசு தெரிவித்துள்ளது. செங்கல்பட்டில் 2,70,679 குழந்தைகள், மயிலாடுதுறையில் 69,386 குழந்தைகள், சிவகங்கையில் 1,16,871 குழந்தைகள், தஞ்சாவூரில் 1,82,485 குழந்தைகள், திருநெல்வேலியில் 1,32,999 குழந்தைகள் மற்றும் விருதுநகரில் 1,44,075 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4/5
5 வயது வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 22.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து செலுத்தப்படாமல் விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் 6010 வைக்கப்படும்.
5/5
போலியோ சொட்டு மருந்து - சிறப்பு ஏற்பாடுகள்
போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் உள்ள பயண வழி மையங்களில் (Transit Booths) சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.