Sabarimala Special Trains: சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து இரண்டு மாதங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sabarimala Special Trains: சபரிமலை சிறப்பு ரயில் முன்பதிவு விவரம், ரயில் நேரம் விவரங்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
1/5
சபரிமலை கோயில் மண்டல பூஜை
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். குறிப்பாக, சபரிமலை மண்டல, மகரவிளக்கு பூஜை நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து, மகர விளக்கு பூஜை வரை 2 மாத காலத்துக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும்.
2/5
சபரிமலைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்
இந்த காலக்கட்டத்தில் நாள்தோறும் 80,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில், தமிழக பக்தர்களின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வாராந்திர சிறப்பு ரயில்கள் இரண்டு மாதங்களுக்கு தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
3/5
எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு 2 சிறப்பு ரயில்கள்
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின்படி, ரயில் எண் 06121 எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரயில் நவம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 23ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் தினமும் சனிக்கிழமை இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நவம்பர் 22ஆம் தேதி முதல் ஜனவரி 24ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
4/5
சிறப்பு ரயில்களின் நேர அட்டவணை
ரயில் எண் 06122 கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் சென்ட்ரலுக்கு காலை 11.40 மணிக்கு சென்றடைகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் ஒரு ஏசி முதல் வகுப்பு பெட்டிகள், இரண்டு ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 4 ஏசி மூன்றாம்வ வகுப்பு பெட்டிகள், 13 சாதாரண ஸ்லீப்பர் வகுப்புகள் இருக்கும்.
5/5
எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும்?
இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போதனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, ஏர்ணாகுளம் டவுன், கோட்டயம், திருவலா, செங்கனூர், மவிளிக்கரா, கன்யாகுளம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.