• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யனுமா? சென்னையில் 3 நாட்கள் சிறப்பு முகாம்.. எங்கு, எப்போது?

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யனுமா? சென்னையில் 3 நாட்கள் சிறப்பு முகாம்.. எங்கு, எப்போது?

Written ByUmabarkavi K
Published: Nov 28, 2026, 15:16 IST|Updated: Nov 28, 2026, 15:21 IST
joinshare
Chennai Special Voter Camp: சென்னையில் வாக்காளர் முகாம் நாளை (நவம்பர் 29) நடைபெற உள்ளதாக மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை மட்டுமின்றி, மேலும் இரண்டு நாட்களுக்கு வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Special Voter Camp: இந்த முகாம்களில் வாக்காளர் பெயர் நீக்குதல், சேர்த்தல், முகவரி மாற்றம் போன்றவற்றை வாக்காளர்கள் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

chennai voter camp1/5

நாளை சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம்

சென்னையில் ஏற்கனவே இரண்டு நாட்கள் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிலையில், மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னையில் நாளை (நவம்பர் 29) ஞாயிற்றுகிழமை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும், டிசம்பர் 5,6ஆம் தேதிகளிலும் சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
chennai voter camp2/5

சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடந்த 12.11.2026 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த 21,22ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் முகவரி மாற்றம் ஆகிய பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள அனைத்துவாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றது.
chennai voter camp3/5

3 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்

இருநாட்களில் நடந்த முகாம்களில் மொத்தம் 8,502 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 5,156 பேர் முதல் வாக்காளர்களாகவும் சேர்வதற்கான மனுக்களை அளித்தனர். இந்த நிலையில், தற்போது நவம்பர் 29ஆம் தேதியான நாளை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதையடுத்து, டிசம்பர் 5,6ஆம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
chennai voter camp4/5

வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நேரம்

நவம்பர் 29 (நாளை), டிசம்பர் 5,6ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் முகவரி மாற்றம் ஆகிய பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறவுள்ளது.
chennai voter camp5/5

வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல்

எனவே, வாக்காளர் பட்டியலில், இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள், புதிதாகப் பதிவு செய்யவுள்ள இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்கள், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய விரும்பும் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களை அணுகிப் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
TAGS:
Chennai

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது..! 100 ஆண்டு கனவு நிறைவேறியதாக இந்து அமைப்பினர் மகிழ்ச்சி..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது..! 100 ஆண்டு கனவு நிறைவேறியதாக இந்து அமைப்பினர் மகிழ்ச்சி..

2

பெண்களுக்கு இலவச ஆடு, மாடுகள்! தமிழக அரசின் டபுள் ஜாக்பாட் அறிவிப்பு.. எப்படி பெறுவது?

3

இனி ஆடு, மாடுனுதான் அழைக்கணும்! பெண்களை வெறுக்கும் தாலிபான்கள்.. ஆப்கானிஸ்தானில் அட்டூழியம்

4

இனி டிவிலையும் ரீல்ஸ் பாக்கலாம்! விரைவில் இந்தியாவில் அறிமுகம்..மெட்டா அறிவிப்பு

5

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.