• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஹர்திக் பாண்டியா டிரேட்... சம்பளத்தை வெளியே சொல்லுங்க - மூத்த வீரர் சொல்லும் பாயிண்ட்

ஹர்திக் பாண்டியா டிரேட்... சம்பளத்தை வெளியே சொல்லுங்க - மூத்த வீரர் சொல்லும் பாயிண்ட்

Written BySudharsan G
Published: Aug 17, 2026, 05:08 PM IST|Updated: Aug 17, 2026, 05:13 PM IST
joinshare
Hardik Pandya IPL Trade: ஐபிஎல் தொடரில் வீரர்கள் டிரேடில், இரு அணிகளுக்கு இடையே பரிமாறப்படும் தொகைகள் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் எவ்வளவு தொகைக்கு அந்த வீரர் டிரேட் செய்யப்படுகிறார் என்பது வெளியே தெரிவது அவசியம் என மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Hardik Pandya IPL Trade: ஐபிஎல் டிரேட் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே குல்தீப் யாதவ் (DC to LSG), ரிஷப் பண்ட் (LSG to DC) டிரேட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஹர்திக் பாண்டியா டிரேட் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

IPL Trade1/5

ஐபிஎல் டிரேட்

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. டிசம்பர் மாதம் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன் டிரேடிங் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
Hardik Pandya2/5

ஹர்திக் பாண்டியா

அந்த வகையில் ஹர்திக் பாண்டியா டிரேட்தான் தற்போது அதிகளவில் பேசுபொருளாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை டிரேட் செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது. சிஎஸ்கேவில் ஹர்திக் பாண்டியாவுக்கு சிவம் தூபே மற்றும் கலீல் அகமது; கேகேஆர் அணியில் ரிங்கு சிங் மற்றும் ஹர்ஷித் ராணா; ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் என பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. ஹர்திக் பாண்டியா டிரேட் பேச்சு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
Sunil Gavaskar3/5

சுனில் கவாஸ்கர்

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் சில காட்டமான தகவல்களை கூறி உள்ளார். "வீரர்கள் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு மாறக்கூடும் என்து குறித்து ஊடகங்களில் சில யூகங்கள் பரவி வருகின்றன. நிச்சயமாக இந்த டிரேட் காலம் இன்னும் சிறிது காலம் இருக்கிறது. இருப்பினும் ஒரு வீரர் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு மாறுவது பொதுவெளியில் தெரிந்தாலும் ஒரு பரிமாற்றம் நடைபெறும் போது, அதன் தொகைகள் இந்த 2 அணிகளுக்கும் வீரருக்கும் பிசிசிஐக்கும் மட்டுமே தெரியும்" என டிரேட் குறித்து விவரித்துள்ளார்.
IPL Trade4/5

சுனில் கவாஸ்கர்

மேலும், "இந்தச் சூழலில், ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கு வைத்திருக்கும் சம்பள உச்சவரம்பு பராமரிக்கப்பட்டதா அல்லது மீறப்பட்டதா என்பது மற்ற அணிகளுக்குத் தெரியாது. அதனால்தான் முழுமையான வெளிப்படைத்தன்மைக்காக அந்த தொகைகளும் பொதுவெளியில் இருப்பது முக்கியம். ஐபிஎல் உலகின் மிகச்சிறந்த டி20 லீக் தொடராகும். அதன்மீது பொறாமை கொண்டவர்கள் யாரும் அதன் மீது குற்றஞ்சாட்டாதபடி, முழு வெளிப்படைத்தன்மை பேணப்படுவது மிகவும் அவசியம்" என தெரிவித்துள்ளார்.
IPL Trade5/5

ஐபிஎல் டிரேட்

2022, 2023 ஆகிய சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, 2024ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு All Cash டிரேட் செய்யப்பட்டார். அப்போது அவரின் ஐபிஎல் ஆண்டு வருமானம் ரூ.15 கோடியாகும். ஆனால் இதற்கு பின் நடந்த பேச்சுவார்த்தைகள், பரிமாறப்பட்ட தொகைகள் ஆகியவை குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பிசிசஐ மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் ரிஷப் பண்ட் - குல்தீப் யாதவ் டிரேடும் (லக்னோ - டெல்லி) இப்படியே நடந்தது.
TAGS:
IPL

Trending

  • News
  • Photos
  • Videos
57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

2

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

3

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

4

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

5

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.