தமிழ் திரையுலகை சேர்ந்த விஜய், தற்போது முதல்வர் விஜய்யாக உயர்ந்திருக்கிறார். இவரைப்போலவே, அரசியல் கனவுடன் பல நடிகர்கள் இருக்கின்றனர் என்பது அண்மைக் காலத்தில்தான் தெரிய வந்துள்ளது. அந்த வகையில், விரைவில் அரசியலுக்கு வர காத்திருக்கும் நடிகர்களின் பட்டியல்..
தமிழ்நாட்டை பொருத்தவரை, அரசியலையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி தொடங்கி தற்போது முதல்வர் விஜய் வரை, சினிமாவால் ரசிகர்களை ஆட்கொண்டவர்கள் பின்னாளில் அரசியல் பிரமுகர்களாக மாறியிருக்கின்றனர். அப்படி, சினிமாவில் தற்போது இருக்கும் இளம் நடிகர்கள் பலரும் அரசியல் கனவுகளை கொண்டுள்ளனர். அவர்கள் யார் தெரியுமா?
1/5
முதல்வர் விஜய்
முதல்வர் விஜய், தன்னுடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியை ஆரம்பித்த இரண்டரை ஆண்டுகளில், தமிழ்நாட்டின் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார். தற்போது அடித்துள்ள தவெக அலை, தமிழ்நாட்டில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், விஜய்யை தொடர்ந்து இன்னும் சில நடிகர்களும் அரசியலுக்கு வர காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
2/5
சிலம்பரசன்
நடிகர் சிலம்பரசன், சமீபத்தில் பிரபல யூடியூபர் சவுக்கு மீடியாவின் புதிய அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அரசியல் ரீதியான சில கேள்விகள் கேட்கப்பட்டது. தற்போதைய ஆட்சி குறித்த கேள்விக்கு, “எங்க அண்ணனுக்கு டைம் கொடுங்க” என்றார். “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” என்ற கேள்விக்கு, தனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது என்றும், பார்க்கலாம் என்றும் கூறினார். இவர் அரசியலுக்கு வருவேன் என கூறவில்லை என்றாலும், அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3/5
தனுஷ்
தமிழ்நாட்டில், அடுத்த அரசியல் அலையை ஏற்படுத்த காத்திருக்கிறார் தனுஷ். சமீபத்தில் தன்னுடைய ரசிகர் கூட்டத்தில் இவர் பேசிய தொணி, பேசிய விஷயஙகள், பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் அரசியல் காரணங்களுக்காக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயத்தில், கொடி அறிமுகப்படுத்திய இவர் விரைவில் தன் கட்சியை பதிவு செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
4/5
ரவி மோகன்
சமீப நாட்களாக, பெரும் சர்ச்சைகளில் சிக்கி தனிப்பட்ட பிரச்னைகளில் இருந்து மீண்டு வருபவர், ரவி மோகன். சமீபத்தில் இவர் செய்தியாளர்களை சந்தித்தார். தனி ஒருவன் 2 படத்தின் அப்டேட் குறித்து பேசிய அவர், நல்லது செய்ய ஆர்வம் இருப்பவர்கள் அரசியலுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள் என்றும், அதே ஆர்வத்தோடு வந்தால் தவறே கிடையாது என்றும் கூறியிருக்கிறார்.
5/5
ராகவா லாரன்ஸ்
“திருச்சி கிழக்கு தேர்தலில் இவர்தான் போட்டியிடுகிறாரா?” என்கிற கேள்விக்கு வித்திட்டவர், ராகவா லாரன்ஸ். நடிகரும், மாற்றுத்திறனாளிகளின் கார்டியனாகவும் அறியப்படும் இவர், நான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும் என ஒரே போடாக போட்டார். இதற்கிடையில் இவர் ஊடகத்தினர் மத்தியில் பேசிய சில விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, கொஞ்சம் அரசியல் கருத்துகள் பேசாமல் அமைதி ஆகி இருக்கிறார். இருப்பினும் இவருடைய அரசியல் பிரவேசத்தையும் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.