• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தமிழ்நாடு அரசின் அண்ணன் சீர் திட்டம்! 8 கிராம் தங்கம் பெற புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழ்நாடு அரசின் அண்ணன் சீர் திட்டம்! 8 கிராம் தங்கம் பெற புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

Written ByKarthikeyan Sekar
Published: Oct 19, 2026, 11:34 AM IST|Updated: Oct 19, 2026, 11:43 AM IST
joinshare
Annan Seer scheme Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் அண்ணன் சீர் திட்டத்தில் 8 கிராம் தங்கம் மற்றும் புதிய பட்டுப்புடவை பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Annan Seer scheme Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் அண்ணன் சீர் திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான பயனாளிகள் சரிபார்ப்பு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

Tamil Nadu Government Annan Seer Scheme New Rules1/7

அண்ணன் சீர் திட்டத்தில் புதிய வழிகாட்டுதல்

1. அண்ணன் சீர் திட்டத்தில் புதிய வழிகாட்டுதல் - தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தகுதியான பயனாளிகளைச் சரியாகக் கண்டறிந்து பலன்களை வழங்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Annan Seer Scheme New Rules2/7

ஆதார் இல்லாதவர்களுக்குத் தற்காலிக முகாம்

2. ஆதார் இல்லாதவர்களுக்குத் தற்காலிக முகாம்கள் - ஆதார் அட்டை இல்லாத தகுதியான பயனாளிகள் உடனடியாகப் பதிவு செய்யத் தேவையான உதவிகளை அரசே செய்யும். ஆதார் மையங்கள் இல்லாத பகுதிகளில் அரசுத் துறைகள் மூலமாகவே தற்காலிக சிறப்புப் பதிவு முகாம்கள் அமைத்து, பயனாளிகளுக்குப் புதிய பதிவு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.
Tamil Nadu Government Annan Seer Scheme New Rules3/7

கருவிழி மற்றும் முக அங்கீகாரம்

3. முதல் அடுக்கு: கருவிழி மற்றும் முக அங்கீகாரம் - வயதானவர்கள் அல்லது கைரேகை தேய்ந்த காரணத்தால் கைரேகை பதிவு தோல்வியடைந்தால், கருவிழி ஸ்கேன் (Iris Scan) அல்லது முக அங்கீகாரம் (Face Authentication) மூலம் சரிபார்க்கப்படும். இதற்காக உதவி வழங்கும் மையங்களில் கூடுதல் கருவிகளை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Annan Seer Scheme New Rules4/7

செல்போன் OTP முறை

இரண்டாம் அடுக்கு: செல்போன் OTP முறை - கைரேகை, கண் அல்லது முகம் சார்ந்த மூன்று விதமான பயோமெட்ரிக் முறைகளும் செயல்படாத பட்சத்தில், பயனாளியின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஆதார் OTP அல்லது கால வரம்பிற்குட்பட்ட ஒருமுறை கடவுச்சொல் மூலம் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.
Tamil Nadu Government Annan Seer Scheme New Rules5/7

R Code ஸ்கேன் வசதி

5. மூன்றாம் அடுக்கு: QR Code ஸ்கேன் வசதி - பயோமெட்ரிக் மற்றும் செல்போன் OTP ஆகிய இரண்டு முறைகளுமே சாத்தியமில்லாத சூழ்நிலையில், பயனாளியின் கையில் உள்ள அசல் ஆதார் கடிதத்தில் இடம்பெற்றுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து அதன் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டு திட்டம் வழங்கப்படும்.
Tamil Nadu Government Annan Seer Scheme New Rules6/7

6. விதிவிலக்கு நடைமுறை மூலம் உறுதி

6. விதிவிலக்கு நடைமுறை மூலம் உறுதி : தொழில்நுட்பக் கோளாறுகளால் இந்த மூன்று வழிமுறைகளும் தோல்வியடைந்தாலும், உண்மையான பயனாளி திட்டத்தின் பலனை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, மத்திய அரசின் விதிவிலக்கு நடைமுறைகளின்படி ஆய்வு செய்யப்பட்டுப் பலன்கள் வழங்கப்படும்.
Tamil Nadu Government Annan Seer Scheme New Rules7/7

7. உடனடியாக நடைமுறைக்கு வந்தது

7. உடனடியாக நடைமுறைக்கு வந்தது : அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் முதலே இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் உண்மையான பயனாளிகளுக்கு எவ்விதத் தடையுமின்றி தங்கமும் பட்டுப்புடவையும் முழுமையாகச் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
அனிருத்துக்கு திருமணம்..Love Failure-ல் பிரபல பாடகி? ஒரு பாட்டால் எழுந்த சர்ச்சை!

அனிருத்துக்கு திருமணம்..Love Failure-ல் பிரபல பாடகி? ஒரு பாட்டால் எழுந்த சர்ச்சை!

2

8ம் படித்தவர்களுக்கு தமிழக அரசின் வேலை.. மாதம் ரூ.25,000 சம்பளம்.. மதுரை மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

3

Explained : நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! வீடியோ வெளியிட்ட கேங்ஸ்டர்-நடந்தது என்ன?

4

ஈரோட்டில் கடத்தப்பட்ட நர்ஸ்.. 5 நாளுக்கு பின் காட்டுக்குள் நிர்வாணமாக கிடந்த சடலம்.. கொடூர கொலை!

5

கஜகேசரி ராஜயோகம்.. தீபாவளி முதல் 6 ராசிகளுக்கு கோடீஸ்வரம்.. தொட்டதெல்லாம் வெற்றி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.