• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ரேஷன் கார்டுக்கு தீபாவளி பரிசு கிடைக்குமா? தமிழக மக்கள் எதிர்பார்ப்பு

ரேஷன் கார்டுக்கு தீபாவளி பரிசு கிடைக்குமா? தமிழக மக்கள் எதிர்பார்ப்பு

Written ByKarthikeyan Sekar
Published: Oct 16, 2026, 11:52 AM IST|Updated: Oct 16, 2026, 11:58 AM IST
joinshare
Ration card : தீபாவளிக்கு ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Ration card : புதுச்சேரியில் ரேஷன் கார்டுக்கு தீபாவளி பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதேபோன்ற அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முழு விவரம்
 

Tamil Nadu Ration Card Diwali Gift1/5

1. புதுச்சேரி அரசின் அதிரடி அறிவிப்பு

1. புதுச்சேரி அரசின் அதிரடி அறிவிப்பு : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 5 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புப் பரிசுத் தொகுப்பை வழங்கத் தீர்மானித்துள்ளது. சுமார் 3.45 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், 25 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
Tamil Nadu Ration Card Diwali Gift2/5

2. பரிசுப் பையில் இடம்பெறும் பொருட்கள்

2. பரிசுப் பையில் இடம்பெறும் பொருட்கள் : புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அட்டைதாரர்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 2 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், 1 கிலோ கடலைப் பருப்பு, தலா 500 கிராம் மைதா மற்றும் ரவை ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளன. பண்டிகைக் கால பலகாரங்கள் செய்வதற்குத் தேவையான இந்த அத்தியாவசியப் பொருட்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
Tamil Nadu Ration Card Diwali Gift3/5

3. தமிழக ரேஷன் அட்டைதாரர்களின் எதிர்பார்ப்பு

3. தமிழக ரேஷன் அட்டைதாரர்களின் எதிர்பார்ப்பு : அண்டை மாநிலமான புதுச்சேரியில் தீபாவளி பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்திலும் ரேஷன் அட்டைதாரர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பரிசும் மளிகைப் பொருட்களும் வழங்கி வரும் தமிழக அரசு, இந்த ஆண்டு தீபாவளிக்கும் இதுபோன்ற சிறப்புப் பரிசுத் தொகுப்பை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Tamil Nadu Ration Card Diwali Gift4/5

4. பண்டிகைக் காலச் செலவுகள்

4. பண்டிகைக் காலச் செலவுகள் : பண்டிகைக் காலத்தில் மளிகைப் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெயின் விலை உயர்வது சாமானிய குடும்பங்களுக்குக் கூடுதல் சுமையாக மாறுகிறது. இந்தச் சூழலில், தீபாவளிக்கு ரேஷன் கடைகள் வழியே மளிகைப் பொருட்களோ அல்லது சிறப்புத் தொகுப்போ வழங்கப்பட்டால், தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு அது மிகப்பெரிய நிம்மதியைத் தரும் என்ற குரல்கள் பரவலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
Tamil Nadu Ration Card Diwali Gift5/5

5. தமிழக அரசின் முடிவு என்னவாக இருக்கும்?

5. தமிழக அரசின் முடிவு என்னவாக இருக்கும்? : தீபாவளி நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசும் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தீபாவளி இனிப்பாக சிறப்புப் பரிசுத் தொகுப்பு அல்லது போனஸ் சலுகை குறித்த அறிவிப்பை வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
TAGS:
Ration Card

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.