New Ration Card : ரேஷன் கார்டு குறைத்தீர்ப்பு சிறப்பு முகாம் நாளை தமிழ்நாடு முழுவதும் நடக்க உள்ளது. முழு விவரம்
New Ration Card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டு பெயர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஒரே நாளில் தீர்வு கிடைக்க இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். முழு விவரம் இங்கே
1/5
1. ரேஷன் கார்டு- மக்கள் குறைதீர் முகாம்
1. ரேஷன் கார்டு- மக்கள் குறைதீர் முகாம் : தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில், மாநிலம் முழுவதும் பொது விநியோகத் திட்ட சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. நியாயவிலைக் கடைகள் மற்றும் ரேஷன் அட்டை தொடர்பான சேவைகளை மக்கள் தங்கள் பகுதியிலேயே எளிதாகப் பெற இந்த முகாம் வழிவகுக்கிறது.
2/5
2. முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம்
2. முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் : இந்த மாபெரும் குறைதீர் முகாம் வரும் 10.10.2026 சனிக்கிழமை நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தங்கள் பகுதியில் முகாம் நடக்கும் இடத்துக்கு நேரில் சென்று இந்தச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
3/5
3. முகவரி, பெயர் மற்றும் மொபைல் எண் மாற்றம்
3. முகவரி, பெயர் மற்றும் மொபைல் எண் மாற்றம் : ஸ்மார்ட் கார்டு எனப்படும் மின்னணு குடும்ப அட்டையில் உள்ள எழுத்துப் பிழைகள், பெயர் திருத்தங்கள், வசிப்பிட முகவரி மாற்றம் மற்றும் அட்டைக்குரிய கைபேசி எண்ணை புதிதாகப் பதிவு செய்தல் அல்லது மாற்றம் செய்தல் ஆகிய திருத்தப் பணிகளை இந்த முகாமில் உடனடியாக மேற்கொள்ளலாம்.
4/5
4. புதிய குடும்ப அட்டை மற்றும் உறுப்பினர் விவரங்கள்
4. புதிய குடும்ப அட்டை மற்றும் உறுப்பினர் விவரங்கள் : திருமணம் அல்லது குழந்தை பிறப்பால் புதிய உறுப்பினர்களைக் குடும்ப அட்டையில் சேர்த்தல், இறந்தவர்களின் பெயர்களை நீக்குதல் போன்ற மாற்றங்களைச் செய்யலாம். மேலும், புதிய குடும்ப அட்டை மற்றும் தொலைந்துபோன அட்டைக்கு மாற்றாக நகல் அட்டை கோரி விண்ணப்பிப்பதோடு, குடும்பத் தலைவரின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
5/5
5. ரேஷன் கடை குறைகளுக்குத் தீர்வு :
5. ரேஷன் கடை குறைகளுக்குத் தீர்வு : குடும்ப அட்டை தொடர்பான மாற்றங்கள் மட்டுமின்றி, நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது தொடர்பான குறைகள் மற்றும் பொது விநியோகத் திட்டம் சார்ந்த அனைத்துப் புகார்களையும் பொதுமக்கள் நேரடியாகத் தெரிவித்து உடனுக்குடன் தீர்வு பெறலாம்