• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை: முதலமைச்சர் நிதியிலிருந்து பெற விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை: முதலமைச்சர் நிதியிலிருந்து பெற விண்ணப்பிப்பது எப்படி?

Written ByKarthikeyan Sekar
Published: Nov 25, 2026, 07:51 IST|Updated: Nov 25, 2026, 07:56 IST
joinshare
Tamil Nadu scholarship : தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்கள் ரூ.50,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu scholarship : கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகள் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 

Tamil Nadu Scholarship 20261/5

ரூ.50,000 கல்வி உதவித்தொகை அறிவிப்பு

ரூ.50,000 கல்வி உதவித்தொகை அறிவிப்பு - அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் வறிய நிலையில் உள்ள மாணவ, மாணவியருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நான்காண்டு படிப்பு காலத்தில் ஏதேனும் ஒரு ஆண்டில் ஒரு முறை மட்டும் ரூ.50,000 நிதியுதவியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Scholarship 20262/5

யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - பொறியியல் மட்டுமின்றி மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வி பயிலும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணாக்கர்கள் இந்த உதவித்தொகையைப் பெறலாம்.
Tamil Nadu Scholarship 20263/5

முக்கியத் தகுதிகள் மற்றும் வருமான வரம்பு

3. முக்கியத் தகுதிகள் மற்றும் வருமான வரம்பு - விண்ணப்பிக்கும் மாணவர்கள் அரசின் முகமையினால் நடத்தப்படும் ஒற்றைச் சாளர முறை (Single Window Counselling) வழியாகக் கல்லூரியில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் இருப்பிடச் சான்று பெற்றவராக இருப்பதுடன், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Tamil Nadu Scholarship 20264/5

யாருக்கு இந்த உதவித்தொகை கிடையாது?

4. யாருக்கு இந்த உதவித்தொகை கிடையாது? - கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்கள் இந்த முதலமைச்சர் பொது நிவாரண நிதி உதவித்தொகையைப் பெற இயலாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Scholarship 20265/5

எங்கே, எப்படி விண்ணப்பிப்பது?

5. எங்கே, எப்படி விண்ணப்பிப்பது? - தகுதியுடைய திருவாரூர் மாவட்ட மாணவர்கள், உரிய நெறிமுறைகளைப் பின்பற்றித் தொடர்புடைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அல்லது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்நினோ பாதிப்பு! தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கும் மாவட்டங்களின் பட்டியல் - Explained

எல்நினோ பாதிப்பு! தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கும் மாவட்டங்களின் பட்டியல் - Explained

2

தமிழக அரசு வேலைவாய்ப்பு: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! ரூ.58,500 வரை சம்பளத்தில் வேலை

3

டாஸ்மாக் அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிரடி உத்தரவு: விவரம் உள்ளே!

4

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. 3 நாட்களுக்கு இந்த 2 ரயில்கள் தாமதமாகும்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

5

அனைத்து பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் கொடுப்பது கட்டாயம்! அரசு அதிரடி உத்தரவு..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.