TN Govt Education Aid: IIT, IIM,IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
TN Govt Education Aid: இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கல்வித் உதவித்தொகையாக தமிழக அரசு ரூ.2 லட்சம் வழங்குகிறது. இதனை எப்படி பெறலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
1/5
தமிழக அரசின் கல்வி உதவித்தொகை
தமிழக அரசு மாணவர்களின் கல்விக்காக பல்வேறு உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாணவர்களின் உயர்கல்வி தடைபடாமல் இருக்க பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில், IIM,IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில், இதுகுறித்து முக்கியமான அறிவிப்பை தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2/5
IIT/IIM/IIIT/NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களுக்கு உதவித்தொகை
அதன்படி, IIT/IIM/IIIT/NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த (BC. MBC/DNC) மாணவ, மாணவிகள் 2026-27ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள இருக்க வேண்டும்.
3/5
கல்வி உதவித்தொகை ரூ.2 லட்சம் வழங்கப்படும்
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள IIT/IIM/IIIT/NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு/பட்ட மேற்படிப்பு பயிலும் BC/MBC/DNC பயிலும் மாணவர்கள் உதவித்தொகை வழங்க தகுதியுடையவர்கள். BC.MBC/DNC மாணவர்களுக்கு, கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம். தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணங்கள் அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்
4/5
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முறை
மத்திய/மாநில அரசின் இதர கல்வி உதவித் திட்டங்களில் பயன்பெறும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்களை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை -5, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்), இணையதளம்: www.bcw.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பெறலாம்.
5/5
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனம் Bonafide Certificate உடன் பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும். Renewal விண்ணப்பங்கள் 31.10.2026-க்குள். Fresh விண்ணப்பங்கள் 30.11,2026-க்குள் அனுப்பப்பட வேண்டும். Even Semester கட்டண இரசீதுகள் 15.01.2027-க்குள் அனுப்பப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் குமார் தெரிவித்துள்ளார்.