• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அர்னாப் புயல் எதிரொலி: சென்னையில் இன்று இரவு மழை பெய்யுமா? வெதர்மேன் சொன்ன தகவல்!

அர்னாப் புயல் எதிரொலி: சென்னையில் இன்று இரவு மழை பெய்யுமா? வெதர்மேன் சொன்ன தகவல்!

Written ByR Balaji
Published: Oct 25, 2026, 05:23 PM IST|Updated: Oct 25, 2026, 05:26 PM IST
joinshare

TN Latest Weather Update: அர்னாப் புயலால் அரபிக்கடல் காற்றழுத்தம் நகர்ந்து வருவதால், டெல்டா, கொடைக்கானல், குன்னூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று முதல் நாளை வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
 

TN Weather1/5

அரபிக் கடல் காற்றழுத்தம் வங்கக்கடல் நோக்கி நகர்வு!

தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ் பக்கத்தில், அர்னாப் புயல் வலுப்பெற்று வரும் சூழலில், அரப்பிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழக கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியை நோக்கி இழுக்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் நாளை வரை தமிழகத்தில் இந்த சூழற்சியின் இறுதிக்கட்ட பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
TN Weather2/5

டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை

விழுப்புரம் முதல் நீலகிரி வரையிலான மத்திய உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகள் மழையின் முக்கிய மையங்களாக இருக்கும். குறிப்பாக சேலம், தருமபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி மற்றும் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்கள் , திருவண்ணாமலை பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
TN Weather3/5

தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகப் பகுதிகளான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் சாதகமான மேற்கு காற்று வீசுவதால், அங்கு கூடுதல் பலத்துடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
TN Weather4/5

கொடைக்கானல் & குன்னூருக்கு எச்சரிக்கை

கிழக்கு திசைக் காற்று மலைப் பகுதிகளில் மோதி தேங்குவதால், கொடைக்கானல் மற்றும் குன்னூர் மலைப் பகுதிகளில் மிகக் கடுமையான மழை கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளது. இதனால் மலைப் பகுதி மக்கள் மற்றும் பயணிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
TN Weather 5/5

சென்னையில் மழை பெய்யுமா?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக பகுதிகளிலும், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் கடல் பகுதியிலிருந்து வீசும் காற்றின் ஈரப்பதம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகப் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் அதிக மழையை கணிக்கவில்லை என்றாலும், இதுபோன்ற காற்று அமைப்பால் கடந்த காலங்களில் மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் கணித்துள்ளார்.
TAGS:
Weather

Trending

  • News
  • Photos
  • Videos
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? மாவட்ட ஆட்சியர்  கொடுத்த டிப்ஸ்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்

2

பாஜகவின் Operation D... தமிழக அரசியலில் புதிய நடிகர்... மாணிக்கம் தாகூர் சொல்லும் முக்கிய மேட்டர்

3

FD போடும் முன் இத தெரிஞ்சுக்கோங்க! FD Laddering என்றால் என்ன? நன்மைகள் என்னென்ன? Explained

4

ஓய்வூதியதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடு: நேரில் மனுக்கள் வாங்கப்படாது – அரசு அதிரடி!

5

IIT மெட்ராசில் வேலை: மொத்தம் 8 காலியிடங்கள், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.