Tasmac Latest Announcement: தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்ப கொடுக்கும் திட்டத்தில் தமிழக அரசு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Tasmac Latest Announcement: பாட்டிலுக்கு 10 ரூபாய் இனி மதுபானம் வாங்குவோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிப்பு வெளியாக உள்ளது.
1/5
காலி மதுபானப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்
தமிழகம் முழுவதும் நவம்பர் 1ஆம் தேதி முதல் காலி மதுபானப் பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுபானம் வாங்கும் நேரத்தில் தனியாக ரூ.10 தொகை வசூலிக்கப்படுவதற்கு பதிலாக, ரூ.10 பாட்டிலின் எம்ஆர்பி விலைலேயே சேர்க்கப்பட்டுள்ளது. சரிபார்ப்புக்கு உட்பட்டு, தகுதியுள்ள காலி பாட்டில்களைத் திரும்ப அளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ.10 திரும்பி அளிக்கப்பட்டு வருகிறது.
2/5
காலி மதுபாட்டிலுக்கு ரூ.10
நுகர்வோர் மதுபானத்தை எங்கு வாங்கியிருந்தாலும், எந்தவொரு டாஸ்மாக் விற்பனை நிலையத்திலும் பாட்டில்களை திருப்பிக் கொடுக்கலாம். இனி ஒவ்வொரு பாட்டிலிலும் QR Code (Unique Serialised Identifier) இருக்கும். பாட்டிலை RVM மெஷினில் போட்டு ஸ்கேன் செய்தால், அது சரியான பாட்டில் தானா என சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையை டாஸ்மாக் ஊழியர்கள் கேஸாக கொடுத்து வந்த நிலையில், தற்போது அதில் சில மாற்றங்களை டாஸ்மாக் நிர்வாகம் செய்துள்ளது.
3/5
இனி வங்கிக் கணக்கில் ரூ.10 செலுத்தப்படும்
அதாவது, இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாட்டிலை RVM மெஷினில் போட்டு ஸ்கேன் செய்தால் பாட்டில் சரிபார்க்கப்பட்டு, நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு நேரடியாக ரூ.10 செலுத்தப்படும். இனி கலெக்ஷன் பாயிண்டில் கேஷ் கொடுக்க மாட்டார்கள், கேஷ் வாங்கவும் மாட்டார்கள்.
4/5
எந்த பாட்டிலுக்கு ரூ.10 பணம் கிடைக்காது?
மேலும், QR கோடு இல்லாத, சேதப்படுத்தப்பட்ட, தெளிவாக தெரியாத பாட்டில், ஏற்கனவே ஒருமுறை பணம் பெற்ற பாட்டில், உடைந்த பாட்டில் அல்லது உள்ளே வேறு பொருட்கள் உள்ள பாட்டில், ஸ்கேன் செய்த QR கோடுக்கும் பாட்டிலுக்கும் சம்பந்தம் இல்லை என்றால் பணம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு இனி இந்த வேலையே இல்லை. பாட்டிலை எண்ணுவது, சரிபார்ப்பது, கேஷ் திருப்பி தருவது, கணக்கு வைப்பது ஆகிய எந்த வேலையிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது என அரசு தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
5/5
ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்கினால் ஆன்லைன் பரிவர்த்தனை
மேலும், டாஸ்மாக் கடைகளில் ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்கினால், ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரூ.1000க்கு மேல் மதுபானம் வாங்கினால் ஜனவரி 1ஆம் தேதி முதல் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.