• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /MLA-க்களை வாங்கும் டம்மி CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி சரமாரி கேள்வி..

MLA-க்களை வாங்கும் டம்மி CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி சரமாரி கேள்வி..

சென்னை கொருக்குப்பேட்டையில், ரயில்வே கிடங்கில் கண்டறியப்பட்ட சுமார் 400 டன் அழுகிய வெங்காயம் மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனமான NAFEDக்கு சொந்தமானது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு இதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று விளக்கமளித்துள்ளது.

Written ByYuvashree M
Published: Nov 04, 2026, 02:16 PM IST|Updated: Nov 04, 2026, 02:37 PM IST
joinshare
MLA-க்களை வாங்கும் டம்மி CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி சரமாரி கேள்வி..
Image Credit: Rotten Onion | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு புதிய விதிமுறை! அரசு கொடுத்த முக்கிய அப்டேட்

ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு புதிய விதிமுறை! அரசு கொடுத்த முக்கிய அப்டேட்

2

தீபாவளி சீசனில் விமான கட்டணம் ஏன் 700% வரை உயர்கிறது? உச்சநீதிமன்றம் பதிலும் புதிய விதிகளும்!

3

விராட் கோலி வெறியாட்டம்... ரசிகர்களுக்கு பர்த் டே ட்ரீட்... இந்திய அணி வெற்றி

4

பயணிகளுக்கு அதிர்ச்சி.. பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு.. கர்நாடக அரசு அறிவிப்பு!

5

சமூகநீதிப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்: பா.ம.க தலைவர் அன்புமணி இராமதாஸ்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாட்டில், பருவமழை காரணமாக வெங்காய உற்பத்தி கடுமையாக குறைந்ததை அடுத்து, வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் வெளிச்சந்தையில் இருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து, தமிழக அரசு ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விநியோகிக்கும் திட்டத்தை அமல்படுத்தியது. இதற்காக, NAFED நிறுவனத்துடன், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர், 450 டன் வெங்காயம் தமிழகம் கொண்டு வரப்பட்டது.

அழுகிய நிலையில் இருந்த வெங்காயம்?

இதற்கிடையில், இந்த வெங்காயத்தில் பாதிக்கு மேல் அழுகி இருப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், இந்த வெங்காயத்தை ஏற்றி வந்த ரயில், கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வெங்காயத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்து விட்டோம் என ரயில்வே துறை அறிவித்த நிலையில், இந்த வெங்காயத்தை கொள்முதல் செய்யவில்லை என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதையடுத்து, தமிழக அரசை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உதயநிதி கடும் விமர்சனம்!

உதயநிதி தன்னுடைய ட்வீட்டில், “உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த சோப்ளாங்கி அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து, “ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு.

மேலும் படிக்க | நவம்பர் 13ம் தேதி பள்ளிக்கு வராத மாணவர்களுக்கும் கேக்.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள்.

இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க,  "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை - கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது. அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.

MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த #சோப்ளாங்கி_அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி. ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு. மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள். இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை - கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது. அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர். இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி. இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்? ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்? வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

— Udhay (@Udhaystalin) November 4, 2026

வணிகர்கள் மறுத்துவிட்டனர்...

தொடர்ந்து அவருடைய பதிவில், “இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி. இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்?

ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்? வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?” என்று சரமாரி கேள்விகளை கேட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | இனி பாட்டிலுக்கு ரூ.10 வங்கி கணக்கில் கிரெடிட்.. டாஸ்மாக் எடுத்த முடிவு.. காரணம் என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu