Tasmac Holiday: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.
Tasmac Holiday: மதுராந்தகம் தேர்தலையொட்டி, சட்டமன்ற தேர்தல் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
1/5
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு 5 முனைப்போட்டி நிலவுகிறது. அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
2/5
அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல்
அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து, அக்டோபர் 9ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இடைத்தேர்தலையொட்டி, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்குட்பட்ட அரசு, தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3/5
4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
மேலும், இடைத்தேர்தலையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீரப்பன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள், அவற்றை சார்ந்த மதுக்கூடங்கள், மதுபான உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை மூடப்படுகிறது.
4/5
செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்
மேலும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், திருப்பூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
5/5
விதிகளை மீறும் கடைகள் மீது நடவடிக்கை பாயும்
தாராபுரம் இடைத்தேர்தல் நடைபெறும் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9ஆம் தேதியும் திருப்பூர் மாவட்ட முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், தாராபுரம் தொகுதிகளுக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் அக்டோபர் 6ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.