• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /இந்திய அணி வெற்றி... ஆனாலும் 2வது போட்டியில் பெரிய மாற்றம் வேணும் - என்ன தெரியுமா?

இந்திய அணி வெற்றி... ஆனாலும் 2வது போட்டியில் பெரிய மாற்றம் வேணும் - என்ன தெரியுமா?

Written BySudharsan G
Published: Aug 19, 2026, 14:58 IST|Updated: Aug 19, 2026, 15:03 IST
joinshare
India vs Sri Lanka : இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை கைப்பற்ற செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பெரியளவில் முன்னேற்றம் காணவில்லை. இருப்பினும் WTC இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இந்திய அணி தற்போது இறுகப்பற்றியுள்ளது. இத்தொடரை கைப்பற்றினால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு இன்னும் பிரகாசமாகும்.

IND vs SL 1st Test1/5

இந்திய அணி வெற்றி

இலங்கையின் காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் போட்டியில் மோதின. ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 462 ரன்களை அடித்தது, இலங்கை அணி 284 ரன்களை அடித்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 228 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றது.
IND vs SL 1st Test2/5

இந்திய அணி வெற்றி

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 193 ரன்களை அடித்தது. இதனால், இலங்கை அணிக்கு 372 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நேற்று மதியம் பேட்டிங் செய்ய தொடங்கிய இலங்கை அணி, நேற்றைய தினமே 4 விக்கெட்டை இழந்திருந்தது. இந்நிலையில், இன்றும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 206 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால், இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது.
IND vs SL 1st Test3/5

இந்திய அணியின் பெஸ்ட் வீரர்கள்

இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் தேவ்தத் படிக்கல் 167&44, கேஎல் ராகுல் 82&35, ரிஷப் பண்ட் 39&66, துருவ் ஜூரேல் 51&7 என சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணி பந்துவீச்சில் மானவ் சுதார் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் மற்றும் 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் என மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு இன்னிங்ஸிலும் ஜடேஜா 4, பிரசித் 3, சிராஜ் 2 , குல்தீப் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
IND vs SL 1st Test4/5

இலங்கை அணி பேட்டிங்

அதேபோல், இலங்கை அணி இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்ய 7, அஷிதா பெர்ணான்டோ 6 விக்கெட்டை கைப்பற்றினர். அதேபோல், பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸிலும் சோனல் தினுஷாதான் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தார். இடது கை பேட்டரான இவர் முதல் இன்னிங்ஸில் 100 ரன்கள் மற்றும் 2வது இன்னிங்ஸில் 84 ரன்கள் என 184 ரன்களை சேர்த்தார்.
IND vs SL 1st Test5/5

பிளேயிங் லெவன் மாற்றம்

இந்தச் சூழலில் 2வது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி (ஞாயிறு) கொழும்பு மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியை வென்றால் இந்திய அணி ஐசிசி WTC இறுதிப்போட்டிக்கு தகுதிபெற முடியும். எனவே, இந்திய அணி அடுத்த போட்டியில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய ஒரு முக்கிய மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். இந்திய அணியில் ஆப்-ஸ்பின்னர் இல்லாத காரணத்தால் இலங்கையின் இடது கை பேட்டர்கள் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக சோனல் தினுஷா (184 ரன்கள்), டிக்வெல்லா (90 ரன்கள்) ஜோடி சிறப்பாக விளையாடியது. எனவே, அடுத்த போட்டியில் இவர்களை தடுக்க ஆப்-ஸ்பின்னர் சரண்ஷ் ஜெயினை பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவர வேண்டும். குல்தீப் யாதவுக்கு பதில் அவருக்கு வாய்ப்பளிக்கலாம்.
TAGS:
Cricket

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.