• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு உண்டா...? இந்திய அணியின் பிளேயிங் 11 மாற்றங்கள் என்ன?

சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு உண்டா...? இந்திய அணியின் பிளேயிங் 11 மாற்றங்கள் என்ன?

Written BySudharsan G
Published: Oct 04, 2026, 05:16 PM IST|Updated: Oct 04, 2026, 05:19 PM IST
joinshare
IND vs WI 1st T20: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20ஐ போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் காம்பினேஷன் எப்படி இருக்கிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்.

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் மொத்தம் 5 டி20ஐ போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கின்றன. இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் காம்பினேஷனை இங்கு காணலாம்.

IND vs WI T20I1/5

அக். 6இல் தொடங்கும் டி20ஐ தொடர்

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஓடிஐ தொடர் நிறைவடைந்துவிட்டது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஓடிஐ தொடரை வென்றது. இரு அணிகளுக்கும் எதிரான டி20ஐ தொடர் வரும் அக். 6ஆம் தேதி தொடங்குகிறது.
IND vs WI T20I2/5

டி20ஐ தொடர் அட்டவணை

அக். 6, அக். 9, அக். 11, அக். 14, அக். 17 ஆகிய தேதிகளில் முறையே லக்னோ, ராஞ்சி, இந்தூர், ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட மைதானங்களில் ஐந்து டி20ஐ போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. ஆசிய விளையாட்டுத் தொடரில் தங்கப் பதக்கத்தை வென்ற கையோடு இந்திய டி20ஐ அணி இத்தொடருக்கு வருகை தர இருக்கிறது.
IND vs WI T20I3/5

ஜப்பானில் பிளேயிங் லெவன் காம்பினேஷன்

ஆசிய விளையாட்டுத் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இருந்தார். மேலும், பிரீமியம் வேகப்பந்துவீச்சாளராக பும்ராவும் சிவம் தூபேவும் மட்டுமே விளையாடினார். அர்ஷ்தீப் சிங் கூட விளையாடவில்லை. ஜப்பானில் சுழலுக்கு அதிக சாதகம் இருந்ததால் அதிக சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாடியது. அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் ஆகியோர் விளையாடினர். நம்பர் 9 வரை பேட்டர்களே இருந்தார்கள்.
IND vs WI T20I4/5

இந்திய அணி ஸ்குவாடில் யாருக்கு வாய்ப்பு?

ஆனால், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20ஐ தொடரில் இந்திய அணி ஸ்குவாடில் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் நமன் திர் சேர்க்கப்பட்டுள்ளார். பும்ராவுக்கு ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வருண் சக்ரவர்த்தி காயமடைந்ததால் குல்தீப் யாதவிற்கு டி20ஐ அணியில் நீண்ட நாளுக்கு பின் வாய்ப்பு கிடைத்துள்ளது.
IND vs WI T20I5/5

இந்திய அணி பிளேயிங் லெவன் கணிப்பு

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி/சிவம் தூபே, நமன் திர், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ். பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி, ரவி பிஷ்னோய் ஆகியோர் பெஞ்சில் இருப்பார்கள். வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் குறைக்கப்படலாம்.
TAGS:
Indian Cricket Team

Trending

  • News
  • Photos
  • Videos
அடையாள அட்டை இருந்தும் தங்க மோதிரம் இல்லை.. காரைக்குடி பெண் விவகாரத்தில் அரசு விளக்கம்

அடையாள அட்டை இருந்தும் தங்க மோதிரம் இல்லை.. காரைக்குடி பெண் விவகாரத்தில் அரசு விளக்கம்

2

அதிருப்தியில் அபிஷேக் சர்மா.. SRHல் இருந்து MI செல்கிறாரா? ரூ. 30 கோடிக்கு டிரேட்?

3

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தீய சக்தியை புறந்தள்ளுங்கள்.. முதல்வர் விஜய் இறுதிக்கட்ட பிரச்சாரம்!

4

“நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்” முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் 4 நறுக் கேள்விகள்!

5

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கனும்.. இபிஎஸ் ஆவேசம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.