பிரபல தெலுங்கு நடிகரான கிரிபாபு, காலமானார். இதனால், தென்னிந்திய திரையுலகமே சோகத்தில் இருக்கிறது. இதையடுத்து இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
தெலுங்கு திரையுலகில், புகழ்பெற்ற மூத்த நடிகராக இருந்தார், கிரிபாபு. இவர், தன்னுடிஅய 80வது வயதில் காலமாகி இருக்கிறார். இவர் குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
1/5
80 வயதான கிரிபாபு
தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற மூத்த நடிகராக விளங்கினார், கிரிபாபு. இவருக்கு 80 வயதான நிலையில், இவர் சில காலமாகவே உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
2/5
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
கிரிபாபு, கடந்த சில நட்களாக உடல்நலக்குறைவு காரனமாக ஐதராபாத்தில் உள்ள கொண்டாபூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
3/5
தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி
கிரிபாபுவின் மரணம், டோலிவுட்டை தாண்டி தென்னிந்திய திரையுலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது மறைவிற்கு தெலுங்கு திரையுலகினர் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
4/5
எப்படி வளர்ந்தார்
சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த அவர், பிறகு 1973ல் ஜகமே மாயா எனும் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்து வந்த அவர், பின்னர் வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகராக களமிறங்கினார். மகேஷ்பாபுவின் ‘அதடு’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்து பிரபலமானார்.
5/5
600க்கும் மேற்பட்ட படங்கள்
சுமார் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கும் இவரது இறப்பு தென்னிந்திய திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.