Thaimaman Thanga Mothiram Thittam: நாளை (செப்டம்பர் 38) 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. 102 மையங்கள் மூலம் நாளை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
Thaimaman Thanga Mothiram Thittam: மதுரை அரசு மருத்துவமனையில் நாளை (செப்.27) 35 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை விஜய் அணிவிக்கிறார்.
1/5
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தவெகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாக இருப்பது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். தவெக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த இத்திட்டத்தை முதல்வர் விஜய் நாளை (செப்டம்பர் 27) துவங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைளுக்கு அரசு சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
2/5
நாளை மதுரை தொடங்கப்படும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார். 2026ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்த திட்டத்தில் கீழ் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாளை பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.
3/5
35 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவிக்கிறார் முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய் பங்கேற்ற முதற்கட்டமாக 35 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும், இத்திட்டத்தின் கீழ் நாளை 1.28 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. ஜூன் 22 முதல் செப்டம்பர் 27ஆம் தேதி பிறந்த 1.28 லட்சம் குழந்தைகளுக்கு 102 மையங்கள் மூலம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
4/5
அடையாள அட்டை பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
மோதிரம் வழங்குவதற்காக அடையாள அட்டை, மருத்துவ அலுவலர்களால் குழந்தைகளின் பெற்றோருக்கு தரப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர்கள் இதனை காண்பித்து நாளை (செப்டம்பர் 28) ஒரு கிராம் தங்க மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறத்தப்பட்டுள்ளது.
5/5
தங்க மோதிரம் திட்டத்தால் 4.41 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள்
மேலும், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் முதற்கட்டமாக 89,955 தங்க மோதிரங்கள் ஜோய் ஆலுக்காஸ் தயாரித்து வழங்கியது. ஒவ்வொரு மோதிரத்திலும் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மோதிரமும் ஒரு கிராம் எடை, 22 கேரட் தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. தங்க மோதிரம் திட்டம் மூலம் சுமார் 4.41 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.