• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /கந்த சஷ்டி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. இந்த தரிசனம் ரத்து!

கந்த சஷ்டி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. இந்த தரிசனம் ரத்து!

Written ByUmabarkavi K
Published: Nov 10, 2026, 17:00 IST|Updated: Nov 10, 2026, 17:03 IST
joinshare
Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி ரூ.100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, பக்தர்கள் கட்டணமின்றி முருகனை தரிசிக்கலாம்.

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், கோயில் நிர்வாகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 

Tiruchendur Murugan Temple1/5

கந்த சஷ்டி பெருவிழா

தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு எண்ணற்ற பக்தர்கள் இருக்கின்றனர். முருகனின் விசேஷ தினங்களில் முக்கியமானது கந்த சஷ்டி விழா. தமிழ் மாதமான ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நவம்பர் 10ஆம் தேதியான இன்று கந்த சஷ்டி விரதம் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், நவம்பர் 16ஆம் தேதி முருகன் - தெய்வாணை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
Tiruchendur Murugan Temple2/5

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் விரதம் இருந்து, முருகனை தரிசித்து செல்வார்கள். இதனால், திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
Tiruchendur Murugan Temple3/5

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனம் ரத்து

அடுத்த 6 நாட்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை கருத்தில் கொண்டு, கோயில் நிர்வாகம் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்துள்ளது. 100 ரூபாய் விரைவு தரிசனக் கட்டண முறை நவம்பர் 16ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Tiruchendur Murugan Temple4/5

கட்டண தரிசனம் ரத்துக்கு காரணம் என்ன?

கந்த சஷ்டி திருவிழா முடியும்வரை அனைத்து பக்தர்களும் பொது தரிசன வரிசையிலேயே அனுமதிக்கப்படுவார்கள். கட்டண வரிசையால், பொது வரிசையில் தரிசனம் செய்யும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவே விரைவு தரிசன கட்டண முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tiruchendur Murugan Temple5/5

பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள்

பொது தரிசனம் மற்றும் முதியோர்கள் தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு 6 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் ஒரு லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட உள்ளன. திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கிடவும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கந்த சஷ்டி திருவிழா போது 15,000 பக்தர்களுக்கு நாள் முழுவதும் அறுசுவை உணவு வழங்கப்படவுள்ளது என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

2

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

3

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

4

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

5

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.