• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /காலிஃபிளவர் உணவுகளுக்கு தடை.. திருப்பதியில் அமல்.. என்ன காரணம்?

காலிஃபிளவர் உணவுகளுக்கு தடை.. திருப்பதியில் அமல்.. என்ன காரணம்?

Written ByUmabarkavi K
Published: Aug 24, 2026, 04:29 PM IST|Updated: Aug 25, 2026, 04:32 PM IST
joinshare
Tirupati Cauliflower Ban: திருப்பதியில் அனைத்து ஹோட்டல்களிலும் காலிஃபிளவர் உணவுகளுக்கு தடை விதித்து தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்காலிகமாக தடை விதிப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tirupati Cauliflower Ban: எனவே, ஏன் காலிஃபிளவர் உணவுக்கு தடை விதிக்கப்படுகிறது என்பது குறித்த காரணத்தை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
 

Tirupati1/5

திருப்பதி

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், திருப்பதி பக்தர்களுக்காக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, திருப்பதியில் அனைத்து ஹோட்டல்களிலும் காலிஃபிளவர் உணவுகளுக்கு தடை விதித்து தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tirupati2/5

புகார்கள்

திருமலை மலையில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தைப் பராமரிக்க அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில், கோபி மஞ்சூரியன், கோபி ரைஸ், காலிஃபிளவர் பக்கோடா போன்ற உணவுகளில் புழுக்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து, திருமலையில் உள்ள ஹோட்டல்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், காலிஃபிளவரில் புழுக்கள் இருப்பது கண்டறியப்படடது.
Tirupati3/5

காலிஃபிளவருக்கு தடை

இதனால், பக்தர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, காலிஃபிளவர் உட்கொள்வதற்கு தற்காலிகமானதாக தடை விதிக்கப்பபடுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ருமலையில் உள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் இந்த விதி கடுமையாக அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tirupati4/5

சீன உணவுகள்

திருமலையில் உள்ள துரித உணவகங்கள், ஹோட்டல்களில் மேகி போன்ற சீன உணவுகளையும் விற்பனை செய்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது காலிஃபிளவர் உணவுகளுக்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Tirupati5/5

திருப்பதி

திருமலைக்கு வரும் பக்தர்கள் இந்த விதிகளைக் கடைப்பிடித்து அதிகாரிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, திருமலையில் உள்ள கோயில்களில் காலிஃபிளவர் முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது.
TAGS:
India

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.