Tiruchendur Special Trains: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tiruchendur Special Trains: நவம்பர் 15ஆம் தேதி திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
1/5
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவம்பர் 10ஆம் தேதி துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிறது நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2/5
திருச்செந்தூர் - நெல்லை இடையே 4 சிறப்பு ரயில்கள்
இதனால், பக்தர்களின் வசதிக்காக நவம்பர் 15ஆம் தேதி திருச்செந்தூர் - நெல்லை இடையே 4 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. நவம்பர் 15ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 06001 என்ற ரயில் திருநெல்வேலியில் இருந்து மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது.
3/5
திருச்செந்தூர் - நெல்லை சிறப்பு ரயில் நேர அட்டவணை
ரயில் எண் 06002 கொண்ட ரயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.50 மணிக்கு சென்றடைகிறது. மேலும், ரயில் எண் 06004 என்ற ரயில் திருச்செந்தூரில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது. மேலும், ரயில் எண் 06003 ரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4/5
சிறப்பு ரயில் எங்கெல்லாம் நிற்கும்?
இந்த ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களில் 10 பொதுப் பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திருச்செந்தூர் செல்ல விருப்பப்படுபவர்கள் இந்த நேரத்தை குறித்துக் கொண்டு, தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5/5
பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கிடவும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது தரிசனம் மற்றும் முதியோர்கள் தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு 6 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் ஒரு லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட உள்ளன என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.